டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருக்கிறார். இது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதிய வரி விதிப்பானது இந்த மாத இறுதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இந்த சூழலில் இந்திய தபால் துறை முக்கியமான ஒரு முடிவினை எடுத்துள்ளது.
இந்தியா மீது 50% வரி: வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப பெரும்பாலான மக்கள் தபால் துறையை தான் நம்புகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் என பல நாடுகளுக்கு நம்முடைய தபால் மற்றும் பார்சலை இந்திய தபால் துறை மூலமாக அனுப்பலாம். இந்த சூழலில் அமெரிக்காவில் புதிதாக சுங்க கட்டணம் நடைமுறைக்கு வர இருக்கிறது, இதில் இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரியும் அடங்கும். எனவே இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு இந்திய தபால் துறை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

தபால் துறை அறிவிப்பு: இந்திய தபால் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி ஆகஸ்ட் 25ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவுக்கான தபால் சேவையை நிறுத்துவதாக தெரிவித்து இருக்கிறது. அமெரிக்கா இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி விதிப்பு அமிலுக்கு வர இருக்கக்கூடிய சூழலில் இந்திய தபால் துறை இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்ட நிர்வாக உத்தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவினை எடுத்திருப்பதாக இந்திய தபால் துறை கூறியிருக்கிறது.
பார்சல் அனுப்ப முடியாது: இந்த மாத இறுதியில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும் அவற்றின் மதிப்பை பொருட்படுத்தாமல் அந்த நாட்டின் மீது அமெரிக்க அரசு விதித்துள்ள இறக்குமதி வரிகளுக்கு உட்பட்டு வசூல் செய்யப்படுமாம். வழக்கமான தபால்/ ஆவணம், 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசு பொருட்களுக்கு தொடர்ந்து வரிவிலக்கு அளிக்கப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெறாத மற்ற பார்சல்கள் அனைத்துக்கும் இந்த புதிய விதிமுறைகளின் படி தான் கட்டணம் வசூல் செய்யப்படுமாம்.
அஞ்சல்/ஆவணங்கள் அனுப்பலாம்: எனவே ஆகஸ்ட் 25க்கு பிறகு சரக்குகளை ஏற்க முடியாது என அமெரிக்காவுக்கு செல்லக்கூடிய விமான நிறுவனங்கள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளன , இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கடிதங்கள் , ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பரிசு பொருட்கள் தவிர ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருள்களின் முன்பதிவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் என இந்திய தபால் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் திரும்ப வழங்கப்படும்: ஏற்கனவே அமெரிக்காவிற்கு பார்சல் அனுப்ப முன்பதிவு செய்தவர்கள் அதனை ரத்து செய்து அதற்காக செலுத்திய தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என இந்திய தபால் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அமெரிக்காவிற்கு முழுமையான அஞ்சல் சேவை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications