நாங்க ரெடி.. நீங்க ரெடியா..? அமெரிக்காவின் Reciprocal Tariff-ஐ எதிர்கொள்ள தயாராகும் இந்தியா..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவிக்கவுள்ள ரெசிப்ரோக்கல் வரிகளால் ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்களில் இருந்து தப்பிக்க இந்தியா விரிவான ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக அரசு அதிகாரிகள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இணைந்து இந்த வரிகளின் தாக்கத்தை மதிப்பிடும் பணிகளைத் துவங்கியுள்ளனர். இதேபோல் இந்த வரி தாக்கத்தில் இருந்து தப்பிக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகள் மீதும் சரிக்குச் சமமாக வரியை விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியா, சீனா, பிரிட்டன், ஐரோப்பா என அனைத்து நாடுகள் மீதும் வரி விதிக்கப்பட உள்ளது. இவை அனைத்தும் ஏப்ரல் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்த உள்ளது.

நாங்க ரெடி.. நீங்க ரெடியா..? அமெரிக்காவின் Reciprocal Tariff-ஐ எதிர்கொள்ள தயாராகும் இந்தியா..!!

தற்போது அமெரிக்கா ஸ்டீல், அலுமினியம், ஆட்டோமொபைல் இறக்குமதி மீது 25 சதவீத வரியை விதித்துள்ளது. இதை அடிப்படையாக வைத்தும், அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு நாடுகள் மீது விதித்துள்ள வரி விகிதங்களைக் கணக்கில் கொண்டு இந்திய அரசு மாற்றுத் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

உள்நாட்டு தொழில் துறையைப் பாதிக்காத வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி, பிளான் டி வரையில் மாற்றுத் திட்டங்களை இந்தியா உருவாக்கி வருகிறது.

மேலும், இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்கச் சந்தையில் தங்களுடைய தயாரிப்புகளையும், சேவைகளையும் விற்க முயலும்போது எதிர்கொள்ளும் வரி அல்லாத தடைகளை அடையாளம் கண்டு அதை பட்டியலிட்டு, இதை அடிப்படையாக வைத்து அமெரிக்க அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சகம் விரிவான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.

வரியை தாண்டி அமெரிக்க வர்த்தக சந்தையில் இருக்கும் இடர்பாடுகளை களைந்து இதன் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இல்லையெனில் இந்த இடர்பாடுகளை அடிப்படையாக வைத்து வரி விதிப்பைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. இரண்டுமே இந்தியாவுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் லாபம் தான், இதேவேளையில் அமெரிக்காவின் இந்த வரி விதிப்பில் இருந்து தப்புவது கடினம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்

டிரம்ப் அரசு அமெரிக்கப் பொருட்கள் மீது பிற நாடுகள் விதிக்கும் தற்போதைய வரிகள், உள்நாட்டு வரிகள், வரி அல்லாத தடைகள், ஒழுங்குமுறை விதிகள், அந்நிய செலாவணி கொள்கைகள் அளவீடுகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியால் நியாயமற்றதாக கருதப்படும் வர்த்தக நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அமெரிக்க அரசாங்கம் இந்த ரெசிப்ரோக்கல் வரிகளை விதிக்கப்படுகிறது. இதேபோல் வழியில் இந்தியாவும் பயணிக்கிறது.

இதேவேளையில் டிரம்ப் இந்திய அரசு அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கும் அதிகப்படியான வரியைக் குறித்துத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் கூட வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அமெரிக்க விவசாய உபகரணங்கள், வாகனங்கள் மீது விதிக்கப்படும் அதிகப்படியான வரி குறித்து விமர்சனம் செய்தார்.

இதனால் இந்தியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு அதிகமாக இருக்கும் எனக் கருத்து நிலவுகிறது. இதேபோல் டிரம்ப் - மோடி மத்தியிலான நடப்புறவு சிறப்பாக இருக்கும் வேளையில் வரி விதிப்புக்குக் கால அவகாசம் கொடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+