ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரித்து, பொருளாதாரம் சரிவடைந்து பெரும் அழிவை ஏற்படுத்தாமல் தடுக்கப்பட்டுள்ளது என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்யாவிட்டால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சுமார் 30-40 டாலர்கள் வரை அதிகரித்திருக்கும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு மேற்கத்திய நாடுகளும், அதன் நட்பு நாடுகளும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அதிகப்படியான கட்டுப்பாடு தடையை விதித்தது. இதனால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மொத்தமாக முடங்கியது, ஆனால் இந்தியா, சர்வதேச நாடுகள் உடனான நட்புறவில் எவ்விதமான விரிதல் ஏற்படாமல் கச்சா எண்ணெய் வாங்கியது.
இதற்கு ஏற்றார்போல் ரஷ்யாவும் இந்தியாவுக்குச் சுமார் 25 முதல் 40 சதவீதம் வரையிலான தள்ளுபடியைக் கொடுத்தது. இப்படி வாங்கப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு எரிபொருளாகப் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது மூலம் சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் எவ்விதமான தடையும் இல்லாமல் கச்சா எண்ணெய் விலை உயர்வை இந்தியா தடுத்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா சுமார் 2.7 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தியுள்ளது என ராய்ட்டர்ஸ் கணித்துள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட கச்சா எண்ணெய், இந்தியா பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், வர்த்தகப் பற்றாக்குறை அழுத்தத்தைக் குறைக்கவும் உதவியது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40% பங்களிப்பை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ரஷ்யாதான் இந்தியாவின் முதன்மையான எண்ணெய் சப்ளையராக இருந்தது. ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை அடுத்த டாப் சப்ளையர்களாக இருந்தன.
உள்நாட்டில் போதுமான பெட்ரோலிய ஆதாரங்கள் இல்லாததால் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
எரிசக்தி பாதுகாப்பை அடைவதற்கும் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டை மாற்றுவதற்கும் சூரிய, காற்று, ஹைட்ரோ மற்றும் பயோமாஸ் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை இந்தியா உருவாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications