நம் நாட்டின் கப்பற்படையில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் ஆகிய இரண்டு விமான தாங்கி கப்பல்கள் இப்போது சேவையில் உள்ளது. இந்த விமான தாங்கி கப்பல்களில் மிக் 29 கே போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும், பராமரிப்பு தொடர்பான சிக்கல்கள் காரணமாக தற்போதைய மிக் 29 கே போர் விமானங்களின் கடற்ப குறைவான செயல்திறனை காட்டியுள்ளது. இதனால் போர் விமானங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன.
இதனையடுத்து இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்களின் திறனை பலப்படுத்துவதற்காக, பிரான்சிடமிருந்து ரூ.63,000 கோடிக்கு புதிய ரஃபேல் எம் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த மாத தொடக்கத்தில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு பிரான்சிடமிருந்து புதிய ரஃபேல் எம் போர் விமானங்களை வாங்குதவற்கான ரூ.63,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஃபேல் போர் விமானங்களின் 26 கடல் வெர்சன்கள் வாங்கப்படும். மேலும் நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களை உள்ளடக்கிய பேக்கேஜ்-ம் இதில் அடங்கும். இந்த ஒப்பந்தம் இறுதியானதையடுத்து, ஏப்ரல் 28ம் தேதியன்று (திங்கட்கிழமை) ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் எம் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது.
வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ள இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தார். ஆனால் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவரால் இந்தியா வர முடியவில்லை. இதனால் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெறும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிிகாரிகள், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் சந்திப்பின்போது புதிய ரஃபேல் எம் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இந்த விழாவின் போது, இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கும் இடையே தொலைதூர சந்திப்பும் திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் 26 ரஃபேல் எம் போர் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் வழங்க வேண்டும் என கூறப்படுகிறது. ரஃபேல் எம் போர் விமானங்கள் வருகைக்கு பிறகு இந்திய கடற்படை மேலும் வலுவடையும்.
இதற்கு முன்பு, பிரான்சிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடி மதிப்பில் மொத்தம் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது அவை இந்திய விமான படையின் அ்ம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் 36 ரஃபேல் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications