பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி இன்றுவரை ஈரானில் போர் மூன்றாவது வாரமாக தொடர்ந்து வருகிறது. போர் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் வராமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை தடை பட்டிருக்கிறது இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 107 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. போர் தொடங்குவதற்கு முன்னர் கூட பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை 70 டாலர்கள் என்ற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போது அது 100 டாலர்களுக்கு மேல் தான் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வதால் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது.

இன்றைய தினம் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.67 ரூபாய் என வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியுள்ளது. அதாவது ஒரு அமெரிக்க டாலரை வாங்குவதற்கு இந்தியா 92.67 ரூபாய் கொடுக்க வேண்டும். பல்வேறு வணிகங்கள் குறிப்பாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு இந்தியா அமெரிக்க டாலரை தான் கொடுக்க வேண்டும்.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து கொண்டே வருவதால் கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்கு கையில் இருக்கக்கூடிய பணத்தை இன்னும் கூடுதலாக கொடுத்து செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இது இந்தியா வசம் இருக்கக்கூடிய ரொக்க கையிருப்பை தொடர்ந்து கரைத்து வருகிறது. இந்திய நிறுவனங்களுக்கு இறக்குமதிக்கான செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் தான் மத்திய அரசு ஒரு முக்கியமான முடிவினை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மணிகண்ட்ரோல் வெளியிடக்கூடிய செய்தியின் அடிப்படையில் தற்போது நிலவிவரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், வெளிப்புற அதிர்ச்சிகர்கள் எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் இறக்குமதி செலவை பாதுகாக்கும் வகையில் வளைகுடா நாடுகள் உடனான வர்த்தகத்திற்கு உள்ளூர் நாணயங்களை கொண்டே செட்டில் செய்வதற்கான ஒரு கட்டமைப்பை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக கூறுகிறது. அதிகாரிகள் தரப்பில் இந்த தகவல்கள் வெளியானதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளால் இறக்குமதி செலவுகள் அதிகரித்து வர்த்தகம் தடைபடுவதை குறைக்க இந்த நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்து இருக்கிறதாம். இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை வளைகுடா நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது என்பதால் முதலில் வளைகுடா கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடன் உள்நாட்டு கரன்சியிலேயே வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளதாம்.
இதன்படி சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ,குவைத் ,கத்தார் ஆகிய நாடுகளிடம் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்யாமல் உள்ளூர் நாணயத்தை கொண்டு வர்த்தகம் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறதாம். இந்தியாவுக்கு தேவையான 85 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி தான் செய்யப்படுகிறது. இதற்கு அமெரிக்க டாலரை வாங்கி வாங்கி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது இந்தியாவுக்கு பெரிய நிதி சுமையை உண்டாக்குகிறது.
இதனால் வர்த்தக பற்றாக்குறை ஏற்படுவதோடு பணவீக்கம் அதிகரித்து பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்கிறது. ஆனால் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்யும் போது இந்த பிரச்சினை இருக்காது. எனவே ஈரான் போருக்கான ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமில்லாமல் நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு பெருமளவிலான ரூபாயை சேமித்து தரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அமெரிக்க டாலர் வலுவடைந்து இந்திய ரூபாய் சரிகிறது. ஏற்கனவே இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே 2022 ஆம் ஆண்டு பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி இரு நாடுகளும் தங்களுடைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக திராம்களில் செட்டில் செய்யும் நடைமுறை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதனை அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications