மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அடுத்த 5 வருடத்தில் இந்தியாவில் புதிதாக 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும், கூடுதலாக 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியும் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்
மேலும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என அறிவித்த நிர்மலா சீதாராமன், ரயில்வே துறைக்கான மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
இத்திட்டங்கள் நிர்ணயம் செய்துள்ளபடி நிறைவேற்றப்பட்டால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் இன்ஜின் ஆக இந்திய ரயல்வே துறை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் முதல் சரக்கு போக்குவரத்து
இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து முதல் சரக்கு போக்குவரத்து வரையில் அனைத்தையும் ரயில்வே துறை மூலம் மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எரிபொருள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரயில்வே துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பெரும் நிதிச் சுமையை மத்திய அரசால் குறைக்க முடியும்.
400 வந்தே பாரத் ரயில்
2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு அடுத்த 3 வருடத்தில் புதிய தலைமுறை 400 வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
100 கார்கோ ரெட்மினல்
இதேபோல் ரயில் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த 100 பிஎம் கதி சக்தி கார்கோ ரெட்மினல்கள் அடுத்த 3 வருடத்தில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ரயில் சரக்கு போக்குவரத்து பெரிய அளவில் மேம்படுத்தப்படும்.
நகரப்புற போக்குவரத்து
இதேபோல் நகரப்புற போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய திட்ட வடிவமைப்புகள் அடிப்படையில் சிறப்பான மெட்ரோ சிஸ்டம் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள்
மேலும் ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் எனப் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா முழுவதும் இருக்கும் உற்பத்தி பொருட்கள் எளிதாக வர்த்தகச் சந்தைக்குள் கொண்டு வர முடியும்.
போக்குவரத்து நெருக்கடி
மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் மூலம் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பது மட்டும் அல்லாமல் பெட்ரோல், டீசல் பயன்பாட்டு அளவை குறைப்பதாக உள்ளது. ஒருபக்கம் ரயில் நிலையங்கள் தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில் புதிய ரயில்களின் அறிமுகத்தால் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த முடியும்.
வளர்ச்சியின் இன்ஜின்
இதுமட்டும் அல்லாமல் நாட்டின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை வளர்ச்சிக்கு இது பெரிய அளவில் உதவும் என நம்பப்படுகிறது. ரயில் சரக்கு போக்குவரத்து மூலம் பொருட்களின் போக்குவரத்துச் செலவுகள் குறைந்து விலைவாசி குறையவும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications