இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமான பயணத்தை பயணம் கிடைப்பதால் லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில்வே நிர்வாகம் ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.
நவீனமாகும் ரயில் நிலையங்கள்: பயணிகள் உடைமைகள் தொடர்பான ஒரு முக்கியமான மாற்றத்தை இந்திய ரயில்வே கொண்டு வர இருக்கிறது. நாம் விமானங்களில் பயணம் செய்யும்போது விமான நிலையத்தில் நாம் கொண்டு செல்லும் பைகளின் எடையை கண்காணிப்பார்கள் , அதேபோன்ற ஒரு வசதியை தான் இந்திய ரயில்வே கொண்டு வர இருக்கிறதாம். இதன்படி பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு முன்பாக அவர்கள் கொண்டு வரும் லக்கேஜின் எடை கண்காணிக்கப்படும்.

எடை இயந்திரம்: இதற்காக நாட்டின் பிரதான ரயில் நிலையங்கள் விரைவில் நவீனப்படுத்தப்பட உள்ளன. ரயில் நிலையங்களில் எலக்ட்ரானிக் எடை இயந்திரங்களை நிறுவ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போதைக்கு குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் இந்த வசதியை கொண்டு வந்து பின்னர் அனைத்து ரயில் நிலையங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எவ்வளவு எடை கொண்டு செல்லலாம்: ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ள அளவைவிட அதிக எடை கொண்ட லக்கேஜை கொண்டு செல்லும் பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் அல்லது அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரயில்வேயில் ஏசி முதல் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் 70 கிலோ வரை லக்கேஜ் கொண்டு செல்லலாம் . அதேபோல ஏசி 2 டையர் வகுப்பில் பயணம் செய்யும் ஒரு பயணி 50 கிலோ வரை லக்கேஜ் கொண்டு செல்ல முடியும். ஏசி 3 டையர் மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகள் 40 கிலோவும் பொது வகுப்புகளில் பயணம் செய்பவர்கள் 35 கிலோ வரையிலும் லக்கேஜ்களை கொண்டு செல்லலாம்.
ஏன் புதிய நடைமுறை: இதை விட கூடுதலாக லக்கேஜ் கொண்டு சென்றால் எடை கண்காணிப்பு இயந்திரத்தில் எடை போடப்பட்டு கூடுதல் எடை இருந்தால் அதற்கு கட்டணம் வசூல் செய்யப்படும். நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் சௌகரியமாக பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக இப்படி ஒரு நடைமுறை கொண்டுவரப்படுவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விமான நிலையம் போல: முதல் கட்டமாக இந்த திட்டம் உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் சந்திப்பு, மிர்சாபூர், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த ரயில் நிலையங்கள் அண்மையில் நவீனப்படுத்தப்பட்டவை என்பதால் இங்கே எடை போடும் இயந்திரம் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கான வசதிகள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது தவிர விமான நிலையங்கள் இருப்பதை இருப்பதைப் போன்ற பிராண்டட் துணிமணி விற்பனை செய்யும் கடைகள், காலணி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பயணத்திற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் இந்த ரயில் நிலையங்களில் நிறுவப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
முதலில் சில ரயில் நிலையங்களில் திட்டம்: ரயில் நிலையங்களை விமான நிலையங்கள் போல மாற்றும் ஒரு முயற்சி தான் இது என தெரிவிக்கப்படுகிறது. தற்போதைக்கு உத்திரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் சந்திப்பு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 960 கோடி ரூபாய் முதலீட்டில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த வசதிகளோடு ஒரு விமான நிலையத்திற்கு நிகரான அனைத்து வசதிகளும் கிடைக்கும் ஒரு ரயில் நிலையமாக பிரயாக்ராஜ் மாற்றப்பட இருக்கிறது.
போர்டிங் பாஸ், விசிட்டர் பாஸ்:இதில் பயணிகளின் காத்திருப்பு அறை ,அதிவேக வைஃபை , தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட இருக்கின்றன. இந்த ரயில் நிலையத்தில் 2026 டிசம்பர் மாதத்தில் இருந்து டெர்மினல் பகுதியில் டிக்கெட்டை கொண்டு போர்டிங் பாஸ் வழங்கப்படுமாம், அனவே அவர்கள் மட்டுமே டெர்மினலுக்கு செல்ல முடியுன், மேலும் அவர்களுடன் வருபவர்கள் பிளாட்பார்ம் டிக்கெட் போல விசிட்டர் பாஸ் என்பதை வாங்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்துவிட்டால் இதனை மாடலாகக் கொண்டு அனைத்து ரயில் நிலையங்களும் மேம்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications