உலகிலேயே 3வது இடம்.. அசத்தும் இந்திய ஸ்டார்ட்அப் துறை..!

இந்தியா இப்போது உலகின் 'ஸ்டார்ட்-அப்' எகோசிஸ்டம்-ன் ஹப் ஆக உள்ளது, 90,000 'ஸ்டார்ட்-அப்'கள் மற்றும் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள 107 யூனிகார்ன் நிறுவனங்களுடன் உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சந்தையாக உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அறிவித்தார்.

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் பெரும் போட்டியே உருவாகியுள்ளது. குறிப்பாக மாநில அளவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும், அதிக முதலீடுகளையும் ஈர்ப்பது யார் என்ற போட்டி பெரிய அளவில் உள்ளது.

இந்தப் போட்டி தற்போது உலக நாடுகள் உடன் போட்டிப்போடும் அளவிற்கு இந்தியாவை உயர்த்தியுள்ளது என்றால் மிகையில்லை.

ஜம்மு பல்கலைக்கழகம்

ஜம்மு பல்கலைக்கழகம்

ஜம்மு பல்கலைக்கழகத்தில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் (AIU) 36-வது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வடக்கு மண்டல இளைஞர் விழாவின் (Antarnaad) நிறைவு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான அனுராக் சிங் தாக்கூர் பேசினார்.

18 பல்கலைக்கழகங்கள்

18 பல்கலைக்கழகங்கள்

நாடு முழுவதிலும் உள்ள 18 பல்கலைக்கழகங்களிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஒரு வார கால விழாவில் பங்கேற்றனர். இந்த முக்கியமான நிகழ்ச்சியில் தான் ஸ்டார்ட்அப் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேசினார்.

 இந்திய ஸ்டார்ட்அப்

இந்திய ஸ்டார்ட்அப்

இந்தியா இப்போது உலகின் 'ஸ்டார்ட்-அப்' எகோசிஸ்டம்-ன் ஹப் ஆக உள்ளது, இந்தியாவில் மொத்தம் 90000 'ஸ்டார்ட்-அப்'கள் மற்றும் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள 107 யூனிகார்ன் நிறுவனங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது, இது இந்தியாவின் இளைஞர்களின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமானது என்று அமைச்சர் கூறினார்.

இந்தியா ஏற்றுமதி

இந்தியா ஏற்றுமதி

இந்தியா இப்போது தடுப்பூசிகளின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர், மொபைல் போன்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உலக நாடுகள் புதிய இந்தியாவைப் பார்க்கிறது என்று அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

நிலையான முதலீடு

நிலையான முதலீடு

இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு, பசுமை வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் பசுமைப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு நிலையான முதலீடு தேவை என்றும் அனுராக் சிங் தாக்கூர் பேசினார்.

 கிரீன் ஹைட்ரஜன்

கிரீன் ஹைட்ரஜன்

தற்போது இந்தியா 5 மில்லியன் மெட்ரிக் டன் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் குளோபல் ஹப் ஆக மாறும் பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது. இது உலகின் மொத்த கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தியில் 10 சதவீதமாகும், இதை அடித்த 5வருடத்தில் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் சாத்தியப்படுத்தவும், இதன் மூலம் பசுமை வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+