டெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் -11.8 சதவீதமாக சரியலாம் என இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. இது முன்பு -5.3 சதவீதமாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்படி இருப்பினும் 2022ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 9.9% வளர்ச்சி காணும் என்றும் இந்த ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி விகிதமானது, 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிவினை எட்டியுள்ள இந்த நிலையில் இந்த திருத்தம் வந்துள்ளது.
இது நடப்பு நிதியாண்டில் 18.44 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பினை சந்திக்கலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. அதோடு இந்த ஆய்வு நிறுவனம் நடப்பு நிதியாண்டில் சில்லறை மற்றும் மொத்த விலை பணவீக்கம் முறையே 5.1 சதவீதம் மற்றும் 1.7 சதவீதம் எதிர்மறையாக வரலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதே அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் -10.5 சதவீதம் குறையலாம் என கணித்திருந்தது. இதற்கு முன்பு -5 சதவீதமாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது நுகர்வு உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி குறிகாட்டிகள், மிகவும் பலவீனமான பொருளாதார மீட்சியை நோக்கிச் செல்கின்றன. அதோடு கொரோனா தடுப்பூசி கண்பிடிக்கும் வரையில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவது கஷ்டம் என இந்தியா ரேட்டிங்ஸ் நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் தொழில் துறையானது 24.2% சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே சேவைத் துறையானது 9.9% சுருங்கும் என்றும், இதற்கிடையில் பிரகாசமான ஒரே துறை விவசாயம் தான். இது நடப்பு நிதியாண்டில் 3.5 சதவீதம் வளர்ச்சி காணும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு விவசாயத் துறையானது தொடர்ச்சியாக மூன்று நல்ல அறுவடைகளை கண்டுள்ளது. ராபி 2019, காரீப் 2019, ராபி 2020 பருவத்தில் நல்ல வளர்ச்சியினைக் கண்டுள்ளது, இது அடுத்த காரிப் 2020 பருவத்திலும் நல்ல வளர்ச்சியினைக் காணலாம் என்றும் கணித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட சரியான பருவமழை காரணமாக விதைக்கப்பட்ட பரப்பளவு 109.5 மில்லியன் ஹெக்டேராக உள்ளது. இது முன்பை விட 6.3% அதிகரித்துள்ளது.
கொரோனாவினால் பொருளாதாரம் மட்டும் சீர்குலையவில்லை. அதோடு பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் மற்றும வேலைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அமைப்புசாரா தொழில்துறையில் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இது மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.
புலம் பெயர் தொழிலாளர்கள் நகர்புறங்களுக்கு திரும்புவதற்கான சில சான்றுகள் இருந்தாலும், செயல்முறை மெதுவாக இருக்க வாய்ப்புள்ளதாக இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications