நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தடுப்பூசிகளின் பங்கு என்பது, தற்போது வரையிலும் குறைவாகவே உள்ள நிலையில், இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை பல்வேறு கணிப்பு நிறுவனங்களும் குறைத்து வருகின்றன.
கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அலையின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது.
எனினும் தற்போது மீட்சி கண்டு வந்து கொண்டிருந்தாலும், தற்போது உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனாவின் தாக்கம் என்பது பல நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தடுப்பூசி விகிதமும் குறைவாக உள்ளது?
இந்தியாவில் இதுவரையில் தாக்கம் பெரியளவில் இல்லாவிட்டாலும், அதே சமயம் தடுப்பூசி விகிதமும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது. இது சந்தையில் இன்னும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதாரம் மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிடிபி கணிப்பு குறைப்பு
இதற்கிடையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்பினை இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. இது முன்னதாக 9.6% ஆக இருந்த வளர்ச்சி விகிதத்தினை, 9.4% ஆக குறைத்துள்ளது.
இது நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 15.3% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது. இதுவே இரண்டாம் காலாண்டில் 8.3% ஆகவும், மீதமுள்ள இரு காலாண்டுகளிலும் 7.8% வளர்ச்சி இருக்கலாம் என கணித்துள்ளது.
முன்னேற்றம் குறித்த காரணிகள்
இந்த வளர்ச்சி விகிதத்தினை குறைத்துள்ள நிலையில் இந்த ரேட்டிங்ஸ் நிறுவனம் சில காரணிகளை பட்டியலிட்டுள்ளது. அதில் கொரோனாவின் இரண்டாம் அலை வீழ்ச்சியடைந்ததை விட பல உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேற்றம் கண்டு வருகின்றன. இரண்டாவது கரீப் பருவம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை கண்டுள்ளது. மூன்றாவது ஏற்றுமதி அளவு மற்றும் வளர்ச்சியில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது.
தடுப்பூசி இலக்கு
பல சாதகமான காரணிகள் சந்தைக்கு சாதகமாக இருந்தாலும், நடப்பு நிதியாண்டில் ஜிடிபி கணிப்பு குறைத்து 10.9% ஆகவும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிதியாண்டிற்குள் வயது வந்தோரில் 88% அதிகமானோருக்கு தடுப்பூசி போட வேண்டும். தினசரி 5.2 மில்லியன் பேருக்காவது தினசரி தடுப்பூசி போட வேண்டும் என்று கூறுகின்றது.
இதே போன்று இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு ஆண்டில் 9.5% வளர்ச்சியினை மதிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications