சர்வதேச அளவில் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வந்தாலும், இந்தியாவில் அதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் உள்ளது. அதிலும் கடந்த ஐந்து, ஆறு காலாண்டுகளிலும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு கொண்டே வருகிறது.
இந்த நிலையில் பல மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி குறித்தான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பிட்ச் குழுமத்தை சேர்ந்த இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம், கடந்த ஜூலை - முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் வளர்ச்சி 4.7 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
ஜிடிபி குறையும்
இன்று இந்தியா ரேட்டிங்ஸ் அன்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மொத்த உள்நாட்டு வளர்ச்சி குறையும் எனவும் கணித்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், நடப்பு நிதியாண்டில் இது நான்காவது முறையாக ஜிடிபி விகிதத்தினை குறைத்துள்ளது. இந்திய பொருளாதாரம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5 சதவிகிதமாக இருந்தது.
இன்னும் வீழ்ச்சியடையும்
இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி என கருதப்பட்டது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இது இன்னும் வீழ்ச்சியடையும் என்று கணித்திருப்பது சற்று கவலையளிக்கும் விதமாகவே இருக்கிறது. இது தொடர்ச்சியாக ஆறாவது காலாண்டில் குறையும் மெதுவான வளர்ச்சியைக் காட்டும் என்றும் கணித்துள்ளது.
சீர்திருத்த நடவடிக்கை
அதிலும் அரசு பல சீர்த்திருத்த நடவடிக்கை எடுத்த போதிலும் இந்த மந்த நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைப்பு உள்ளிட்ட சமீபத்திய நிதி தூண்டுதல்கள் இருந்த போதிலும் இந்த மந்தநிலை நீடித்து வருகிறது. மேலும் இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ரிசர்ச் நிறுவனம் 2020ம் நிதியாண்டிற்கான ஜிடிபி விகிதம் 5.6 சதவிகிதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் செய்யப்பட்ட நான்காவது திருத்தம் என்றும் கூறப்படுகிறது.
மீண்டும் மீண்டும் திருத்தம்
இதே கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிறுவனம் இந்த ஜிடிபி விகிதமானது 6.1 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணித்திருந்தது. எனினும் தற்போது 5 சதவிகிதத்திற்கும் சற்று அதிகமாக திருத்தம் செய்திருப்பது தவிர்க்க முடியாதது என்றும் அது கூறியது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 4.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் இது மதிப்பிட்டுள்ளது.
பலவீனமான போக்கு
இந்த நிலையில் இரண்டாம் காலாண்டு ஜிடிபி விகிதம் வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கபட உள்ளது என்றும் கூறப்படுகிறது. சாதகமான சூழ்நிலைகள் இருந்தும் வளர்ச்சி வேகம் மிக மெதுவான வேகத்திலேயே இருந்து வருகிறது. இதனால் கூட முன்பு அறிவிக்கப்பட்ட வளர்ச்சியை விட இது பலவீனமான போக்கையே காட்டுகிறது.
பலவீனமான நிலையை கண்டுள்ளன
இந்தியாவின் வளர்ச்சி குறித்தான பார்வை நடப்பு நிதியாண்டில் மிக பலவீனமான நிலையை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சில்லறை வணிகங்கள், கார் உற்பத்தியாளர்கள், வீடு விற்பனை, இது தவிர வலுவான தொழில்துறை நிறுவனங்கள் பலவீனமான போக்கையே கண்டு வருகின்றன.
வரி குறைப்பு கைக்கொடுக்கலாம்
நிலவி வரும் மந்த நிலையை போக்க மோடி தலைமையிலான அரசு, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த விகிதத்தினை மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளன. குறிப்பாக கார்ப்பரேட் வரி விகிதத்தினை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்தது, புதிய கார்ப்பரேட் வரி விகிதம் 15 சதவிகிதமாகவும் குறைத்தது. மேலும் புதிய அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க இப்படி ஒரு நடவடிக்கை அரசு எடுத்தது குறி[ப்பிடத்தக்கது.
பல்வேறு சீர்திருத்த நடவடிக்கை
இந்த வரி விகித குறைப்புகள் மற்ற ஆசிய நாடுகளைப் போல கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பொதுத்துறை வங்கிகளுக்கு மறு மூலதனம் அளித்தல், பொதுத்துறை வங்கிகளை இணைப்பது, வாகனத் துறைக்கு ஆதரவு, உள்கட்டமைப்பு செலவினங்களுக்கான திட்டங்கள், மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கான வரிச்சலுகை என விதத்திலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
செலவினங்கள் அதிகரிப்பு
அரசு செலவினங்களும் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது இந்தியா ரேட்டிங்ஸ். இதனால் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை, ஜிடிபி விகிதத்தில் 3.6 சதவிகிதமாக வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு செலவினங்களை குறைத்தால், 2020ம் ஆண்டில் ஜிடிபி விகிதம் 5.6 சதவிகிதத்தை தொடலாம் என்றும் இந்தியா ரேட்டிங்ஸ் மதிப்பிட்டுள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும்
இந்த நிலையில் 2020ம் நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் 1.8 சதவிகிதமாக குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மென்மையான கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் குறைந்த மூலதன பொருட்கள் இறக்குமதி, இந்திய ரூபாயின் சராசரி மதிப்பு டாலருக்கு எதிராக 71.06 ஆக உள்ளன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications