வொர்க் ப்ரம் ஹோம் சலுகைகள் வேகமாக நீக்கப்பட்டு வரும் காரணத்தாலும், குழந்தைகளின் கல்வி ஆகியவற்றின் காரணமாக சொந்த ஊரில் இருந்த பெரும்பாலான மக்கள் நகரங்களுக்கு திரும்ப வந்துள்ளனர். இதனால் இந்தியாவின் பெரு நகரங்களில் வாடகை வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்து வாடகை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பலர் சொந்த வீட்டை வாங்கும் முடிவை எடுத்தனர், இப்படி 2023 ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் வீடுகளின் மொத்த விற்பனை 6 வருட உச்சத்தை எட்டியுள்ளதாக ரியல் எஸ்டேட் கன்சல்டன்சி சேவை நிறுவனமான Knight Frank தெரிவித்துள்ளது.

எப்படி நிறுவனங்கள் தனது நிதி முடிவுகள் மூலம் அதன் செயல்திறனை வெளிப்படுத்துகிறதோ, இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையின் வளரச்சியை பட்டியலிடும் வகையில் Knight Frank செப்டம்பர் காலாண்டு அடிப்படையிலான வளர்ச்சியை India Real Estate Q3 2023 தலைப்பில் வெளியிட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் நாட்டின் டாப் 8 நகரங்களின் ரியல் எஸ்டேட் வர்த்தகம் குறித்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டு உள்ளது. இதேபோல் சென்னையில் ஒரு சதுரடியின் சராசரி விலையையும் பட்டியலிட்டு உள்ளது.
செப்டம்பர் காலாண்டில் மட்டுமே இந்தியாவின் டாப் 8 நகரங்களில் சுமார் 82,612 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 12 சதவீதம் அதிகமாகும். இதில் குறிப்பாக 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய வீடுகளின் விற்பனை 39 சதவீதமும், 50 லட்சம் முதல் 1 கோடி மதிப்பிலான வீடுகளின் விற்பனை 14 சதவீதமும் வருடாந்திர அடிப்படையில் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் நாட்டின் 8 முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்ட 82,612 வீடுகளில் 28,642 வீடுகள் 1 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடையது. இதை தொடர்ந்து 50 லட்சம் முதல் 1 கோடி மதிப்பிலான வீடுகள் பிரிவில் 29,827 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பெரு நகரங்களில் மலிவான வீடுகள் என மதிப்பிடப்படும் 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்புடைய வீடுகள் பரிவின் விற்பனை 10 சதவீதம் குறைந்து 24,143 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசு மலிவான வீடுகளின் விற்பனையை அதிகரிக்க பல சலுகைகளை அளித்து வருகிறது.

சந்தையில் இருக்கும் டிமாண்ட்-ஐ புரிந்துக்கொண்டு ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் 85,549 வீடுகள் அடங்கிய புதிய கட்டுமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளனர். இந்த வீடுகளின் எண்ணிக்கை கடந்த வருடத்தை காட்டிலும் 23 சதவீதம் அதிகம், மேலும் இது விழாக்கால விற்பனைக்கு உந்து சக்தியாக இருக்கும் என சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
மேலும் இந்தியாவின் டாப் 8 நகரங்களிலும் ரியல் எஸ்டேட் விலை அதிகரித்துள்ளது, ஆனால் ஹைதராபாத்தில் கிட்டத்தட்ட 11 சதவீதம் வருடாந்திர அடிப்படையில் அதிகரித்து இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் ஒரு சதுரடி சராசரியாக 4429 ரூபாய். இது செப்டம்பர் காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் சராசரி விலை அளவீடு. சென்னையில் ரியல் எஸ்டேட் விலை வருடாந்திர அடிப்படையில் 3 சதவீதமும், காலாண்டு அடிப்படையில் 2 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இதேபோல் என்சிஆர் பகுதியில் 4660 ரூபாய், அகமதாபாத் 3012 ரூபாய், புனே 4463 ரூபாய், மும்பையில் 7600 ரூபாய், பெங்களூரில் 3585 ரூபாய், கொல்கத்தாவில் 3585 ரூபாய், ஹைதராபாத்தில் 5518 ரூபாய்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications