சென்னை: இந்தியாவின் நேரடி வரி வசூல் கடந்த ஆண்டை விட 17.7 சதவீதம் அதிகரித்து, மார்ச் 2024 இல் முடிவடைந்த 2023 - 2024ஆம் நிதியாண்டில் ரூ. 19.58 கோடியை எட்டியுள்ளது. இது எதிர்பார்த்த தொகையை விட அதிக அளவு வித்தியாசத்தில் உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை வருமான வரித் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-2024 ஆம் நிதியாண்டில், வருமானம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட மொத்தத் தொகை, ஆரம்ப பட்ஜெட் மதிப்பீடுகளை விட ரூ. 1.35 லட்ச கோடியை தாண்டியுள்ளது, இது 7.40 சதவீதம் அதிகமாகும். மேலும், திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட ரூ.13,000 கோடியை தாண்டியுள்ளது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

தனி நபர் வருமானம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிகளை உள்ளடக்கிய மொத்த வசூல் 2023-2024 நிதியாண்டில், 18.48 சதவீதம் அதிகரித்து ரூ.23.37 லட்சம் கோடியாக உள்ளது. ரீஃபண்டுகளை கணக்கிட்ட பிறகு, இந்த வரிகளின் நிகர வருமானம் 17.7 சதவீதம் அதிகரித்து ரூ. 19.58 லட்சம் கோடியாக உள்ளது. இந்த வளர்ச்சியானது நல்ல பொருளாதார முன்னேற்றம் மற்றும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு வருமான அளவு அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2023-24 நிதியாண்டில் மொத்தம் ரூ.3.79 லட்சம் கோடி ரீஃபண்டு தோகை திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
CBDT-இன் அறிக்கையின்படி, 2023-24ஆம் நிதியாண்டில் நேரடி நிகர வசூல் ரூ.19.58 லட்சம் கோடி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது முந்தைய நிதியாண்டான 2022-23ல் ரூ.16.64 லட்சம் கோடியாக இருந்தது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆரம்பத்தில் ரூ.18.23 லட்சம் கோடி வசூல் என்று மதிப்பிடப்பட்டிருந்தது, பின்னர் அது ரூ.19.45 லட்சம் கோடியாக மாற்றம் செய்யப்பட்டது.
2023-2024ஆம், நிதியாண்டில் நேரடி வரிகளின் மொத்த வசூல் ரூ.23.37 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டான 2022-23-இல் ரூ.19.72 லட்சம் கோடியாக இருந்த மொத்த வசூலுடன் ஒப்பிடுகையில் 18.48 சதவீதம் அதிகமாகும்.
மொத்த கார்ப்பரேட் வரி வசூல் 13.06 சதவீதம் அதிகரித்து ரூ.11.32 லட்சம் கோடியை எட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டில் ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. 2023-24 நிதியாண்டின் நிகர கார்ப்பரேட் வரி வசூல் ரூ.9.11 லட்சம் கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டு வசூலான ரூ.8.26 லட்சம் கோடியை விட 10.26 சதவீதம் வளர்ச்சியைக் குறிக்கிறது.
2023-24 நிதியாண்டில் பத்திரப் பரிவர்த்தனை வரி (STT) உட்பட மொத்த தனிநபர் வருமான வரி வசூல் ரூ. 12.01 லட்சம் கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டு வசூலான ரூ.9.67 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 24.26 சதவீதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது.
2023-24 நிதியாண்டில் எஸ்டிடி உட்பட நிகர தனிநபர் வருமான வரி வசூல் ரூ.10.44 லட்சம் கோடியாக இருந்தது, இது முந்தைய நிதியாண்டின் ரூ.8.33 லட்சம் கோடியை விட 25.23 சதவீதம் வளர்ச்சியைக் குறிக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications