ஈரான் போர் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தை துண்டித்துள்ளது. 10 நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்லவில்லை. மேற்காசிய நாடுகளிலேயே ஏராளமான எண்ணெய் கப்பல்கள் முடங்கி நிற்கின்றன. இதனால் சவுதி, குவைத் உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியையே நிறுத்தி வைத்துள்ளன.
ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்த சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால் உடனடியாக அதன் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலர்களை கடந்தது அதன் பின்னர் சரிந்தது இருந்தாலும் 80 டாலருக்கு மேல் தான் விலை தொடர்ந்து நீடிக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜி7 நாடுகள் தங்கள் கை இருப்பில் இருக்கக்கூடிய கச்சா எண்ணெயை வெளிக்கொண்டு வரவேண்டும் என சர்வதேச எரிசக்தி முகமை கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஜி7 நாடுகளின் கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா இந்த கூட்டமைப்பில் ஒரு உறுப்பினராக இருக்கிறது. இந்த சூழலில் சர்வதேச எரிசக்தி முகமையின் கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது.
சர்வதேச எரிசக்தி முகமை ஜி7 நாடுகள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை குறைப்பதற்கு தங்கள் கையிருப்பில் இருக்கக்கூடிய கச்சா எண்ணெயை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் மத்திய அரசு அதனை மறுத்து விட்டதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமான இந்த நிகழ்வு எங்களால் நடக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்து விட்டதாம் இதற்கு யார் பொறுப்போ அவர்கள் தான் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு விட்டதாம். இந்தியாவைப் பொறுத்தவரை தன் கைவசம் 5.3 மில்லியன் டன்கள் கச்சா எண்ணெய் இருப்பினை கொண்டிருக்கிறது.
இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இப்போது கச்சா எண்ணெய் வரத்து தடைப்பட்டு இருப்பதால் மத்திய அரசு தங்கள் கையிருப்பில் இருக்கக்கூடிய கச்சா எண்ணெயை உள்நாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. மேலும் இந்தியா சர்வதேச எரிசக்தி முகமையின் முழுநேர உறுப்பினர் இல்லை என்பதால் அந்த அமைப்பு வெளியிடக்கூடிய எந்த ஒரு உத்தரவையும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்ற தேவை கிடையாது.
ஏற்கனவே உள்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரசு அதனை சரி செய்யும் நடவடிக்கைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும்.ஏனெனில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகிய மூன்றுமே கோடிக்கணக்கான இந்தியர்களின் பாக்கெட்டிலேயெ கை வைக்க கூடியவை.


Click it and Unblock the Notifications