இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2.07% ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 1.54% ஆகக் குறைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் 2-6% இலக்கு வரம்பின் கீழ்மட்டத்தை விட குறைவான அளவீட்டை பதிவு செய்துள்ளது. CPI அளவீட்டில் பதிவாகியுள்ள சரிவுக்கு மிகவும் முக்கியமான காரணம் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து வந்ததே.
ஜூன் 2017க்குப் பிறகு இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மிகக் குறைவான அளவீட்டை பதிவு செய்துள்ளது. இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீட்டில் (CPI) 50 சதவீதம் உணவுப் பொருட்கள் பங்கு வகிக்கிறது. இப்படியிருக்கும் போது ஆகஸ்ட் மாதத்தில் உணவு பணவீக்கம் 0.69% குறைந்திருந்த நிலையில், செப்டம்பரில் -2.28% ஆகக் குறைந்ததுள்ளது.

கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த உணவுப் பொருட்களின் விலைகள், அண்மைய மாதங்களில் கணிசமாகக் குறைந்துள்ளன. குறிப்பாக, காய்கறி விலைகள் ஏப்ரல் மாதத்திலிருந்து இரு இலக்கங்களில் குறைந்து வருகின்றன. கடந்த ஏழு மாதங்களாக, ரிசர்வ் வங்கியின் 4% என்ற இலக்கிற்கு கீழே இருந்து வருகின்றன.
இதேவேளையில் மத்திய அரசு ஜிஎஸ்டி-யில் செய்த மாற்றங்களின் முழுமையான தாக்கம், அக்டோபர் மாதத்தில் முழுமையாக தெரியும், அக்டோபர் மாதத்தில் நாட்டின் பணவீக்கத்தை 1%க்கும் கீழ் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் ஊரக மற்றும் நகர்ப்புற விகிதங்கள் முறையே -2.17% மற்றும் -2.47% ஆக உள்ளன. எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2.43% ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 1.98% ஆகக் குறைந்துள்ளன.
காய்கறி விலைகள் முந்தைய மாதத்தில் 15.92% குறைந்திருந்த நிலையில், செப்டம்பரில் 21.38% சரிந்துள்ளன. உணவுப் பொருட்களின் விலை குறைவு இந்த மாதத்தில் ரிசர்வ் வங்கி தனது பணவீக்க கணிப்பை குறைக்கத் தூண்டியது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரை வரிகளை விதித்திருந்தாலும், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடவடிக்கைகளால் இதன் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications