சீனாவுக்கு மீண்டும் ஒரு பெரும் அதிர்ச்சி கொடுத்த இந்தியா.. பொது கொள்முதல் விதிகள் மாற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவுடனான எல்லை வரிசையில் சீனா மற்றும் அதனுடன் பொதுவான எல்லைகளைக் கொண்ட பிற நாடுகளில் இருந்து, பொது கொள்முதல் செய்வதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை கடந்த வியாழக்கிழமையன்று விதித்துள்ளது.

Recommended Video

India Border-ல் சீண்டும் China மீது New Trade Rules-ஐ விதித்த India |Oneindia Tamil

இந்த அதிரடி நடவடிக்கையானது சீனாவுடன் எல்லை பிரச்சனை நிலவி வரும், இந்த பதற்றமான நிலையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது சீனா மற்றும் இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கும் சற்று பின்னடைவை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

சீனாவுக்கு அதிகம் பாதிப்பு

சீனாவுக்கு அதிகம் பாதிப்பு

ஏற்கனவே அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தற்போது இபப்டி ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளது இந்திய அரசு. இந்த அதிரடி நடவடிக்கையானது இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் அனைத்து நாடுகளுக்கும் தான் என்றாலும், இதன் பாதிப்பு அதிகம் சீனாவுக்கே என்று கருதப்படுகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஏனெனில் மற்ற நாடுகளை விட இந்தியாவுடன் அதிகம் வர்த்தகத்தில் ஈடுபடுவது சீனா தான். மேலும் இந்தியாவுடன் தனது எல்லைகளை பகிரிந்து கொள்ளும் நாடுகளைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பாதுகாப்பு அனுமதி (Security Clearance) மற்றும் சிறப்புக் குழுவில் பதிவு செய்த பின்னரே பொது கொள்முதல் வர்த்தகத்தில் ஈடுபட முடியும்.

கட்டுப்பாடுகளில் திருத்தம்

கட்டுப்பாடுகளில் திருத்தம்

கடந்த வியாழக்கிழமையன்று ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், இந்தியாவுடன் எல்லைகள் உள்ள நாடுகளின் ஏலதாரர்களைக் கட்டுப்படுத்த, இந்திய அரசு 2017 பொது நிதி விதிகளை திருத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிரடியான நடவடிக்கையானது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவுத்துறை உத்தரவு

செலவுத்துறை உத்தரவு

நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை (National Securtiy) வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த விதியின் கீழ் பொது கொள்முதல் குறித்த விரிவான உத்தரவை செலவுத் துறை (Department of Expenditure) வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின் கீழ் இந்தியாவின் எல்லையிலுள்ள எந்தவொரு சப்ளையரும், இந்தியாவில் பொருட்கள், பொதுத் திட்டங்களுக்கான சேவைகள் அல்லது திட்டப்பணிகளை வழங்குவதற்கு ஏலம் எடுக்க முடியும்.

சில தளர்வுகள்

சில தளர்வுகள்

எனினும் மாநில கொள்முதல் செய்வதற்கு தகுதிவாய்ந்த அதிகார சபையானது மாநிலங்களால் அமைக்கப்படும், ஆனால் அரசியல் மற்றும் பாதுகாப்பு அனுமதி அவசியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதோடு டிசம்பர் 31, 2020 வரையில் உலகளாவிய தொற்று நோயினை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ பொருட்களை வாங்குவது உட்பட சில வரையறுக்கப்பட்ட நிகழ்வுகளில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டை பாதுகாப்பதில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு

நாட்டை பாதுகாப்பதில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு

நாட்டைப் பாதுகாப்பதில் மாநில அரசுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இதைக் கருத்தில் கொண்டு, மாநில அரசுகள் மற்றும் மாநில நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விஷயத்தில் இந்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக, அரசியலமைப்பின் 257 (1) வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு இந்திய அரசு ஒரு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India restrict all neighbour countries for government procurement, it may hurt china

India imposes curbs on public procurement.. India restrict all neighbour countries for government procurement, it may hurt china
Story first published: Friday, July 24, 2020, 13:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X