அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 57 பைசா சரிவினைக் கண்டு, 76.92 ரூபாயாக சரிவினைக் முடிவடைந்துள்ளது.
இது அமெரிக்காவின் வட்டி விகித அதிகரிப்புக்கு பிறகு அமெரிக்க டாலரின் மதிப்பானது வலுவடைந்து வரும் நிலையில், அதன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டுள்ளது.
இன்று காலை தொடக்கத்திலேயே ரூபாயின் மதிப்பானது 76.61 ரூபாயாக சரிவினைக் கண்டு தொடங்கியது. எனினும் முடிவில் 57 சரிவினைக் கண்டு, 76.92 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டாலரின் மதிப்பால் சரிவு
ரூபாயின் மதிப்பு சைடுவேயாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அது ரூபாய்க்கு சாதகமான விஷயமாக அமையலாம். எனினும் தொடர்ந்து டாலரின் அதிகரித்து வரும் நிலையில் அது ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவும் ஒரு காரணம்
அமெரிக்க மத்திய வங்கியானது வரவிருக்கும் அடுத்த நாணயக் கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சர்வதேச சந்தைகள் ஆனது ஏற்றத்தில் காணப்படும் நிலையில், இது இந்திய சந்தையில் முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் ரூபாயின் சரிவுக்கு காரணமாக அமையலாம்.
சப்ளை சங்கிலியில் தாக்கம்
மேலும் உக்ரைன் -ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எரிபொருள் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம்.
எதிர்பார்ப்பு
ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து இந்திய அரசின் இலக்கினை தாண்டி பணவீக்கமானது உச்சம் தொட்டுள்ளது. ஆக இதுவும் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பு 76.40 - 76.90 ரூபாய்க்கு இடையில் வர்த்தகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு சரிவா?
இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், முதலீட்டாளார்கள் புராபிட் புக்கிங் செய்ய நினைக்கலாம். இதுவும் சந்தை சரிவுக்கு ஒரு காரணமாக அமையலாம். இதற்கிடையில் தான் இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கன்டுள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 0.30% வீழ்ச்சி கண்டு 76.73 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications