இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமேடுத்து வரும் நிலையில் பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற கவலை தொடர்ந்து இருந்து வருகிறது.
இதற்கிடையில் இந்திய பங்கு சந்தைகளும் சரிந்து வந்தன. ஆனால் இன்று இதெற்கெல்லாம் விதிவிலக்காக இன்று இந்திய பங்கு சந்தைகளும் சற்று ஏற்றம் கண்டுள்ளது. அதன் விளைவாக டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பும் இன்று காலை தொடக்கத்தில் 30 பைசா அதிகரித்து 75.65 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கியது.

இந்த நிலையில் தற்போது (12.15 மணியளவில் ) 75.64 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது. அமெரிக்கா டாலரின் மதிப்பு சற்று குறைந்தமையால், இந்திய பங்கு சந்தைகளும் சற்றும் ஏற்றம் கண்டு வருகின்றன. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று ஏற்றம் கண்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸினால் ஆரம்ப காலத்தில் அதிகளவில் வெளியேறி வந்த அன்னிய முதலீடுகளுக்கு மத்தியில், தற்போது அது நேர்மறையாக மாறியுள்ளது. இது சற்று குறைந்துள்ளதாகவும், இது உள்ளூர் அலகுக்கு ஆதாரவளிப்பதாகவும் கூறியுள்ளார். எனினும் கொரோனா வைரஸ் குறித்தான கவலைகளும் தொடர்ந்து இருப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்கா சீனா மத்தியில் நிலவி வரும் பதற்றங்கள், இது புதிய வணிகங்களுக்கு வழிவகுக்கும் என்ற உணர்வும் மற்ற நாடுகள் மத்தியில் நிலவி வருகிறது. இது ஆசிய பங்குகள் ஏற்றம் காணவும் வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக ஆசிய நாணயங்கள் சற்று ஏற்றம் கண்டுள்ளன என்று ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் அதன் ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
இதற்கிடையில் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 146.9 புள்ளிகள் அதிகரித்து, 30,819 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 48 புள்ளிகள் அதிகரித்து 9088 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
இதற்கிடையில் ஆறு நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பு 0.26 சதவீதம் வீழ்ச்சி கண்டு 99.60 டாலராகவும் உள்ளது. எனினும் உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்களின் உணர்வுகள் பலவீனமாக இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications