உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை, வர்த்தகத் தடை என அடுக்கடுக்காகப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள வேளையில், ரஷ்யா உடனான இந்தியாவின் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் உக்ரைன் போருக்கு பின்பு இந்தியா - ரஷ்யா மத்தியில் புதிய வர்த்தகப் பாதை உருவாகியுள்ளது.
இப்புதிய வர்த்தகப் பாதை மூலம் இயல்பான வர்த்தகப் பாதையைக் காட்டிலும் வேகமாகப் பொருட்கள் டெலிவரி செய்யப்படுவது மட்டும் அல்லாமல் போக்குவரத்துச் செலவுகள் 30 சதவீதம் வரையில் குறைகிறது.
உலக நாடுகளின் தடைகளை மீறி, வல்லரசு நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத வகையில் வர்த்தகம் செய்து வருகிறது இந்தியா - ரஷ்யா.
அனைத்திற்கும் மேலாக இந்தியா - ரஷ்யா வர்த்தக இணைப்பிற்கு முக்கியப் பாலமாக இருப்பது உலக நாடுகளால் வர்த்தகத் தடைகளை எதிர்கொண்டு வரும் ஈரான்.
ரஷ்யா - இந்தியா
உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுச் சர்வதேச வர்த்தகச் சந்தையில் இருந்து ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ரஷ்யா தற்போது தன் நாட்டின் மீது தடை விதிக்காத நாடுகள் உடனான வர்த்தகத்தை அதிகரித்துத் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சித்து வருகிறது.
INSTC வழித்தடம்
இந்த நிலையில் உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா மீது தடை விதிக்காத இந்தியா உடனான வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த 3 மாதத்தில் வியக்கவைக்கும் வகையில் வளர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஈரான் உதவியுடன் இந்தியா - ரஷ்யா மத்தியில் பயன்பாட்டுக்கு வந்த INSTC வழித்தடம் தான்.
ஈரான்
ஈரான் வாயிலாக இந்தியா மற்றும் ரஷ்யாவை இணைக்கும் இண்டர்நேஷனல் நார்த் சௌத் டிரான்ஸ்போர்ட் காரிடார் (INSTC) பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது. INSTC திட்டம் சீனாவின் BELT ROAD INITIATIVE திட்டத்தைக் காட்டிலும் மிகப் பெரியதாகவும், நன்மை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
7200 கிலோமீட்டர் வர்த்தகப் பாதை
இண்டர்நேஷ்னல் நார்த் சௌத் டிரான்ஸ்போர்ட் காரிடார் (INSTC) திட்டம் என்பது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்து ஈரான் மற்றும் இந்திய துறைமுகங்களை இணைக்கும். இத்திட்டம் சுமார் 7200 கிலோமீட்டர் நீளம் கொண்ட வர்த்தகப் பாதை. இது மட்டும் அல்லாமல் இத்திட்டத்தின் வாயிலாகக் கேஸ்பியன் கடல் பகுதியில் இருக்கும் கஜகஸ்தான் உட்படப் பல நாடுகளை வர்த்தகச் சந்தைக்குள் இணைக்க முடியும்.
114 கண்டெய்னர்கள்
INSTC வழித்தடத்தில் மே முதல் ஜூலை வரையிலாகக் காலக்கட்டத்தில் மட்டும் இந்தியா ரஷ்யா மத்தியில் சுமார் 3000 டன் சரக்குகளை 114 கண்டெய்னர்களில் அனுப்பப்பட்டு உள்ளது.
ஈரான் ஷிப்பிங் லைன்ஸ்
ஈரான் ஷிப்பிங் லைன்ஸ் ஏப்ரல் மாத தொடக்கத்தில் INSTC வழித்தடத்தில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான செயல்பாட்டுக் குழுவை உருவாக்கியது. மேலும் நிறுவனம் இதுவரை 300 கப்பல்களை இந்தப் பாதை வழியாகப் பொருட்களைக் கொண்டு செல்ல ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications