இந்திய பொருளாதாரம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் உலகளவில் 3 வது இடத்தைப் பிடிக்கும் எனக் கணிப்புகள் வெளியாகும் நிலையில், இந்தியா ஆயுத ஏற்றுமதியை முக்கியமானதாகக் கையில் எடுத்துள்ளது.
குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில் ரஷ்யா இந்தியாவுடன் கூடுதல் நெருக்கமாகப் பயணித்திட முடிவு செய்துள்ளது.
இதன் எதிரொலியாக இந்தியா அணுவாயுதம் கொண்டு தாக்க கூடிய ஏவுகணைகளை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு உள்ளது.
மேக் இன் இந்தியா
மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டணியில் உருவாக்கப்படும் நிறுவனத்தின் மூலம் அணுஆயுதத்தைப் பயன்படுத்தும் சூப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் 5 பில்லியன் டாலர் அளவிலான ஆர்டர் குவியும் என இக்கூட்டணி நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
ஏவுகணை
இந்த ஏவுகணைக்காக இந்த ஆண்டுப் பிலிப்பைன்ஸ் நாடு இந்தியாவிடம் சுமார் 375 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஏற்றுமதிக்கான ஆர்டர் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல நாடுகள் உடன் பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு உள்ளதாக அதுல் டி ரானே தெரிவித்துள்ளார்.
BrahMos Aerospace நிறுவனம்
BrahMos Aerospace நிறுவனம் இந்த அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை விற்பனை செய்யத் தற்போது இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகள் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நாடுகளின் எண்ணிக்கை அடுத்தச் சில வாரத்தில் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
MiG பைட்டர், Su-30 ஜெட் விமானம்
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் BrahMos Aerospace நிறுவனம் இந்திய அரசு சார்பில் 50.5 சதவீதமும், ரஷ்யா 49.5 சதவீத பங்குகளைக் கொண்டும் இயங்க உள்ளது. இக்கூட்டணி நிறுவனம் ரஷ்யாவி்ன் MiG பைட்டர் விமானம், Su-30 ஜெட் விமானம் ஆகியவற்றுக்கான உரிமம் பெற்று உற்பத்தி செய்ய உள்ளது. இதில் BrahMos ஏவுகணைகளும் அடக்கம்.
கலாஷ்னிகோவ் ஏகே 203
ரஷ்யாவின் புதிய ரகக் கலாஷ்னிகோவ் ஏகே 203 துப்பாக்கியின் மாஸ் ப்ரொடெக்ஷன் இந்தியாவில் செய்ய உள்ளதாக ரஷ்ய அதிகாரி திங்கட்கிழமை தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோர்வா பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் கலாஷ்னிகோவ் ஏகே 203 துப்பாக்கி தயாரிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications