ரஷ்யா அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் தருவதால், அமெரிக்க டாலரின் மதிப்பும் ஆதிக்கமும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என பலதரப்பினர் கூறுகின்றனர்.
உக்ரைன் போருக்கு முன் இந்தியா ரஷ்யாவில் இருந்து தனது மொத்த இறக்குமதியில் ஒரு சதவிகித கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. உக்ரைன் போருக்கு பின் தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி 20 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தினமும் சுமார் 12 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்குகிறது. கச்சா எண்ணெய் மட்டுமின்றி ரஷ்யாவிலிருந்து சமையல் எண்ணெய் மற்றும் உரங்களையும் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
இதற்கும், டாலர் ஆதிக்க சரிவுக்கும் என்ன காரணம்..?
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு இறக்குமதி அதிகரித்து வரும் அதே நேரம் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து வருகிறது. இறக்குமதி சுமார் 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் ஏற்றுமதி சுமார் 14 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
டாலர் ஆதிக்கம்
இந்தியா ரஷ்யா மத்தியிலான வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர் அல்லாமல் உள்நாட்டு கரன்சிகளான ரூபாய் மற்றும் ரூபிள் ஆகியவற்றின் மூலம் யூரோ வாயிலாகவும் வர்த்தகம் செய்ய முடிவு செய்திருந்தன. இதனால் ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகைக்கு டாலர் தேவை குறைந்துள்ளது. இதனால் சந்தையில் தேவைக்கு அதிகமான டாலர் இருப்பு இருக்கும் காரணத்தால் டாலருக்கான டிமாண்ட் குறைந்து டாலரின் ஆதிக்கம் ஆசிய சந்தையில் குறைந்துள்ளது.
ரஷ்ய வங்கிகளில் குவியும் இந்திய ரூபாய்!
இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் இறக்குமதி அல்லது ஏற்றுமதிக்கு டாலருக்கு பதிலாக ரூபாயில் தொகையை செலுத்தும் வசதியை வோஸ்ட்ரோ கணக்கு மூலம் பெறுகின்றன. இந்தியாவிலும் Vostro கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை ரஷ்யாவுடன், இந்திய ரூபாய் மூலமாக அதிக கொடுக்கல் வாங்கல் நடக்கவில்லை. ஏனெனில் இந்தியாவின் அதிக இறக்குமதி காரணமாக இந்திய ரூபாய் ரஷ்யாவில் அதிகமாக குவிந்து வருகிறது.
ரஷ்யா ஏற்றுமதி!
சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா தற்போது முன்னேறியுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு மேற்கு நாடுகளில் ரஷ்யாவை வணிகத்தில் இருந்து புறக்கணித்த காரணத்தால் ரஷ்ய அரசு பல ஏற்றுமதி வழிகளை இலகுவாக்கியுள்ளது. அதன்படி சமீபத்தில் கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் ஏற்றுமதி செய்து வருகிறது.
வோர்டெக்சா
எனர்ஜி கார்கே டிராக்கர் வோர்டெக்சா (energy cargo tracker Vortexa) தரவுகளின்படி இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பிப்ரவரியில் ஒரு நாளுக்கு 1.6 மில்லியன் பேரல்களாக உயர்ந்துள்ளது எனவும் பாரம்பரிய எண்ணெய் சப்ளையர்களான ஈராக் மற்றும் சவுதி அரேபியாவின் ஒருங்கிணைந்த இறக்குமதியை விட இது மிகவும் அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஆதிக்கம்
ரஷ்யா தொடர்ந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக இருப்பதாகவும், தொடர்ந்து ஐந்தாவது மாதமும், இந்தியாவிற்கு விற்பனை செய்யும் மொத்த எண்ணெயில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக ரஷ்யா வழங்குவதாக தெரிகிறது.
ஈராக் மற்றும் சவூதி அரேபியா
வோர்டெக்சாவின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பல தசாப்தங்களாக இந்தியாவின் முக்கிய எண்ணெய் சப்ளையர்களாக இருக்கும் ஈராக் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்த எண்ணெயை விட ரஷ்யா இப்போது அதிகமாக இறக்குமதி செய்து வருவதாக கூறியுள்ளது.
ரஷ்ய வங்கிகளுக்கு தடை!
போருக்குப்பின் பல ரஷ்யா வங்கிகளின் பணப் பரிவர்த்தனைகளை சில நாடுகள் முடக்கியுள்ளன. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை பெரிய அளவில் இறக்குமதி செய்து ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) கரன்சியான திர்ஹாம் மூலம் ரஷ்யாவுக்கு பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
பொருளாதாரத் தடை
அதிலும் கடந்த மாதம் அமெரிக்கா, பிரிட்டன், மாஸ்கோ மற்றும் அபுதாபியை தளமாகக் கொண்ட ரஷ்ய வங்கியான MTS ஐ ரஷ்ய நிதி நிறுவனங்களுடன் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் சேர்த்த பிறகு ரஷ்ய எண்ணெய்க்கான திர்ஹாம்களில் தொடர்ந்து பணம் செலுத்துவது கடினமாகிவிடும்.
ஆனால் அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியர்கள், ரஷ்ய எண்ணெய் சப்ளையர்களிடமிருந்து வர்த்தகம் செய்வதில் உறுதியாக இருப்பதாக இந்திய சுத்திகரிப்பு ஆதாரங்கள் கூறுகின்றன.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறையுமா?
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணரும், இப்போது உட்ரோ வில்சன் இன்டர்நேஷனல் சென்டர் ஃபார் ஸ்காலர்ஸில் ஒரு உலகளாவிய உறுப்பினருமான டேனியல் அஹ்ன் (Daniel Ahn) கூறுகையில் அமெரிக்க டாலரை மற்ற நாட்டு கரன்சிகளுடன் ஒப்பிட முடியாது. ஆனால் சில காரணங்களால் நிதி அமைப்புகள் டாலரை குறைத்து மதிப்பிட வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.
விளாடிமிர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செப்டம்பரில் சீனாவிற்கு எரிவாயு விநியோகங்களை டாலருக்குப் பதிலாக யுவான் மற்றும் ரூபிள்கள் மூலம் விற்க ஒப்புக்கொண்டதாகக் கூறியுள்ளார். ஏனெனில் சீனா அமெரிக்க டாலர்களின் இருப்பை குறைத்துள்ளதால், இதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் டாலரின் விலை மற்றும் அதன் ஆதிக்கம் குறையுமா என்பது தெரியவில்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications