டெல்லி: இந்தியா மற்றும் ரஷ்யா மத்தியிலான 70 வருட நட்புறவை பறைசாற்றும் வகையில் நரேந்திர மோடி 3வது முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற பின்பு ரஷ்யாவுக்கு 2 நாள் அரசுமுறை பயணமாகச் சென்றார். இந்த பயணத்தில் நரேந்திர மோடி மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோர் நேரில் சந்தித்துப் பல முக்கியமான விஷயங்களை விவாதித்தனர்.
இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு பின்னால் முக்கியமாக இருப்பது இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக ஒத்துழைப்பு தான். பிரதமர் தற்போது ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா நாட்டிற்குச் சென்றுள்ளார்.

நரேந்திர மோடி மற்றும் விளாடிமிர் புடின் சந்திப்பில் இரு நாடுகளும் 2030ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரிப்பதற்கு ஒப்புக்கொண்டு பல துறையில் ஒத்துழைப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ.8,40,000 கோடியாகும்.
முதலீடுகள், வர்த்தகத்திற்கு உள்நாட்டு நாணயங்கள் பயன்பாடு மற்றும் எனர்ஜி, வேளாண்மை, உட்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற 22வது வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டில் (Bilateral Summit) இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஒன்பது முக்கிய ஒத்துழைப்பு துறைகள்: நரேந்திர மோடி மற்றும் விளாடிமிர் புடின் சந்திப்பில் வர்த்தகம், தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி வர்த்தகக் கணக்குகளைத் தீர்த்தல், வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற புதிய வழிகளின் மூலம் சரக்கு போக்குவரத்தை அதிகரித்தல், வேளாண்மை பொருட்கள், உணவு மற்றும் உரங்கள் ஆகியவற்றின் வர்த்தகத்தை அதிகரித்தல், அணுசக்தி உட்பட எனர்ஜி துறையில் ஆழமான ஒத்துழைப்பு, உட்கட்டமைப்பு மேம்பாட்டில் ரஷ்யாவின் பங்கீடு அதிகரித்தல், டிஜிட்டல் பொருளாதார முதலீடுகள், மருந்து விநியோகம் மற்றும் மனிதாபிமான பணிகளில் ஒத்துழைப்பு ஆகிய ஒன்பது முக்கிய துறைகளில் இரு தரப்பும் ஒத்துழைக்க ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன.
இந்த 9 முடிவுகளில் வர்த்தக சந்தையை நேரடியாக பலன் அளிக்கும் முக்கிய முடிவுகள்:
யூரேசியா வர்த்தகத் தடைகளை நீக்குதல்: இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகத் தடைகளை (Non-tariff barriers) குறைப்பதிலும், யூரேசியா பொருளாதார ஒன்றியம் (EAEU) - இந்தியா இடையே ப்ரீ டிரேட் மண்டலத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் இரு நாடுகளும் தீவிரமாகப் பங்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு மண்டலம் மூலம் இந்தியாவின் தயாரிப்புகள் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் ஐரோப்பியச் சந்தையில் குறைவான வரி விதிப்புகள் உடன் கொண்டு செல்ல முடியும்.
நாணயக் கணக்கு தீர்த்தல் முறை: 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா - ரஷ்யா மத்தியிலான 100 பில்லியன் டாலர் அதாவது 84000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை எட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் வேளையில், இந்த வர்த்தகத்திற்கான பண பரிவர்த்தனைகளை டாலர், யூரோ போன்று அல்லாமல் ரூபாய், ரூபிள் போன்ற நாணயத்தில் பரிமாற்றம் செய்வதை மேலும் எளிதாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய வர்த்தக வழித்தடங்கள்: வடக்கு-தெற்கு வழித்தடம் மற்றும் சென்னை-விளாட்வோஸ்டாக் கடல் வழி போன்ற புதிய வழிகளின் மூலம் இரு நாடுகள் மத்தியிலான சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்து முடிவு செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications