2022 ஆம் ஆண்டு இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகத்திற்கு பொற்காலமாக அமைந்த நிலையில், இந்த வர்த்தகத்தையும் நடப்புறவையும் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எனர்ஜி மற்றும் விவசாய உரம் ர இறக்குமதியில் பதிவான தடாலடி அதிகரிப்பைத் தொடர்ந்து, 2022 இல் எப்போதும் இல்லாத வரகையில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் 31 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது,
இந்த அளவீட்டை இந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்ய ரஷ்யா - இந்தியா அரசு அதிகாரிகள் மத்தியில் அடுத்த வாரம் இந்தியாவில் மெகா வணிக சந்திப்பை நடத்தப்பட உள்ளது.
சர்வதேச பொருளாதார கூட்டம்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் ஒரு பகுதியாக 'ரஷ்யா-இந்தியா வர்த்தக மன்றம்: மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான Strategic Partnership' மார்ச் 29-30 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தான் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தை 50 பில்லியன் டாலர் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
முக்கிய கவனம்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் முக்கிய கவனம் தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப இறையாண்மை, ஸ்மார்ட் நகரங்கள், போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ், சுகாதாரம் மற்றும் மருந்துகள் ஆகிய தான். இதை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கிரேட்டர் யூரேசியாவில் தொழில்நுட்ப கூட்டணிகளை உருவாக்குவதும், மேம்படுத்துவதும் தான் மைய புள்ளி.
50 பில்லியன் டாலர்
2025 ஆம் ஆண்டிற்கான வர்த்தக இலக்கு முன்பு 30 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்ததன் காரணமாக இந்த அளவை 2022 ஆம் ஆண்டிலேயே தாண்டியது. மேலும் இந்த எண்ணிக்கை 2023 இல் 50 பில்லியன் டாலர்களை எட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர்
பிப்ரவரி 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு பெரிய பாதிப்பை எதிர்கொண்டது மட்டும் அல்லாமல் அதிகளவிலான பாதிப்பை வர்த்தக சந்தை, பொருளாதாரம், விலைவாசியிலும் எதிர்கொண்டது. இந்த நிலையில் இந்திய ரூபாய் அடைப்படையிலான பேமெண்ட் முறையை கொண்டு வந்தது.
nostro, vostro கணக்குகள்
இதற்கு அடிப்படையில் ஊக்கம் அளித்தது ரஷ்யா என்றால் மிகையில்லை, இரு நாட்டு வங்கிகளும் எதிர் நாட்டில் nostro, vostro கணக்குகளை திறந்து உள்நாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்ய துவங்கியுள்ளது. இந்த கட்டமைப்பு பல நாடுகளுக்கு பெரிய அளவில் உதவிய காரணத்தால் சுமார் 18 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி 18 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வங்கிகளுக்கு இந்தியாவில் Vostro கணக்குகளை திறக்க ஒப்புதல் அளித்துள்ளது, இதன் மூலம் இந்திய இறக்குமதியாளர்கள் டாலர், யூரோ போன்ற நாணயங்கள் அல்லாமல் இந்திய ரூபாயிலேயே வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு பேமெண்ட் செய்ய முடியும்.
18 நாடுகள்
போட்ஸ்வானா, பிஜி, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா மற்றும் இங்கிலாந்து ஆகிய 18 நாடுகளின் வங்கிகளுக்கு இந்தியாவில் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications