16 வயதிலேயே AI ஸ்டார்ட் அப்..!! தந்தைக்கே வேலை கொடுத்த இந்திய சிறுவன்..!!

16 வயதில் பெரும்பாலானவர்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருப்பார்கள். ஆனால் கேரளாவின் கொச்சியை சேர்ந்த 16 வயது மாணவர் ராகுல் ஜான் அஜு (Raul John Aju) ஒரு ஸ்டார்ட் அப்பை நிறுவி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் ஏஐ சிறுவன் (AI Kid of India) என அழைக்கப்படும் ராகுல் ஜான் அஜூ, சொந்தமாக ஒரு ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருவதுடன், தனது தந்தையையே நிறுவனத்தில் பணியமர்த்தி மாதந்தோறும் ரூ. 2 லட்சம் சம்பளம் வழங்கி வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

16 வயதிலேயே AI ஸ்டார்ட் அப்..!! தந்தைக்கே வேலை கொடுத்த இந்திய சிறுவன்..!!

ராகுல் ஜான் அஜு, தற்போது கொச்சியின் வடக்கு எடப்பள்ளி ஜி.எச்.எஸ்.எஸ் பள்ளியில் 12அம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் படித்துக்கொண்டே செயற்கை நுண்ணறிவு துறையில் தனது ஆர்வத்தை தொழிலாக மாற்றியுள்ளார். ஒன்பது வயதாக இருக்கும்போதே ஏஐ மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி அறிவியல் திட்டத்திற்காக தனது சொந்த குரலில் பேசும் MeBot என்ற ரோபோவை அவர் உருவாக்கினார்.

தற்போது ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கியுள்ள இந்த சிறுவன் 15 பேருக்கு வேலை தந்துள்ளார். அதில் இவரது தந்தையும் ஒருவர். பொதுவாக பிள்ளைகள் தங்கள் தந்தையிடம் பாக்கெட் மணி கேட்பதுதான் வழக்கம். ஆனால், ராகுல் தனது தந்தையையே தன் நிறுவனத்தில் ஒரு பணியாளராக வேலைக்கு அமர்த்தியுள்ளார். அவருக்கு மாதந்தோறும் 2 லட்சம் ரூபாய் சம்பளமும் வழங்கி வருகிறார்.

Also Read

தன்னுடைய நிறுவனத்தின் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சி தந்துள்ளார். தனக்கு தேவையான தொழில்நுட்ப அறிவை இணையம் மூலமாக கற்றுக்கொள்ள முடியும். ஆனால், என் தந்தைக்கு இருக்கும் பல வருட அனுபவம் எனக்கு இல்லை. அவர் அமேசான் ,அடோப், விப்ரோ ,ஐபிஎம் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவர். அவரிடமிருந்து நான் பல வணிக யுக்திகளை கற்றுக்கொள்ள முடிகிறது. மேலும், இது எனது நிறுவனத்தின் மார்க்கெட்டிங்குக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது என்கிறார்.

AIRealm Technologies என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் ராகுல் செயல்பட்டு வருகிறார். இவர் MeBot, RESQ AI, ZapGap, Investo AI மற்றும் FeedFye போன்ற 15-க்கும் மேற்பட்ட ஏஐ கருவிகளை உருவாக்கியுள்ளார். அவசரகால உதவிகள் மற்றும் சட்ட உதவிகளை பொதுமக்களுக்கு எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில் கேரளா அரசுடன் இணைந்து JustEase மற்றும் Rescue AI போன்ற திட்டங்களிலும் இவர் பங்களித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கலந்துகொண்டு, ஏஐ காலத்தில் இளைஞர்களின் பங்கு குறித்து பேசினார். மேலும், டெல்லியில் நடைபெற்ற இந்தியா ஏஐ மாநாடு ,ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜிடெக்ஸ் துபாய் , TEDx மற்றும் பல்வேறு உலகளாவிய உச்சி மாநாடுகளில் பங்கேற்று ஏஐ குறித்து பேசியுள்ளார். தற்போது பள்ளி இறுதி தேர்வுகளுக்கு தயாராகும் அதேவேளையில், ஒரு வெற்றிகரமான ஏஐ நிறுவனத்தை நடத்தி, இளம் தொழில் முனைவோராகவும் ஜொலிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+