இந்தியாவின் முதல் டிஸ்ப்ளே உற்பத்தி யூனிட்: ரூ.24,000 கோடியில் எங்கு அமைகிறது தெரியுமா?

இந்தியாவின் முதல் டிஸ்ப்ளே உற்பத்தி யூனிட் ரூ.24,000 கோடியில் தெலுங்கானா மாநிலத்தில் உருவாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவின் முதல் 10 பில்லியன் டாலர் செமிகான் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.24,000 கோடி மூலதனத்தில் டிஸ்ப்ளே ஃபேப் வசதியை அமைக்க தெலுங்கானா மாநிலத்துடன் நகை ஏற்றுமதியாளர் ராஜேஷின் ஏற்றுமதி நிறுவனமான Elest நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் AMOLED டிஸ்ப்ளேக்கள், லித்தியம்-அயன் செல்கள், பேட்டரிகள் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற புதுமையான தொழில்நுட்ப தயாரிப்புகளை உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Elest நிறுவனம்

Elest நிறுவனம்

இதுகுறித்து நேற்று தெலுங்கானா அரசு வெளியிட்ட அறிக்கையில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், செமிகண்டக்டர்களுக்கு இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக தெலுங்கானாவை மாற்ற வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. Elest நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட முதலீடு இந்தியாவின் மின்னணுவியல் துறையில் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். மேலும் தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய முதலீடுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்ப்ளே ஃபேப்

டிஸ்ப்ளே ஃபேப்

உலகெங்கிலும் உள்ள சில மேம்பட்ட ஆராய்ச்சி மையங்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்து Elest நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் டிஸ்ப்ளே ஃபேப் வசதியை அமைக்கும்.

6 வது ஜெனரேஷன் டிஸ்ப்ளே

6 வது ஜெனரேஷன் டிஸ்ப்ளே

6 வது ஜெனரேஷன் AMOLED டிஸ்ப்ளே ஃபேப் வசதி ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் கம்ப்யூட்டர்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்றவற்றுக்கான அடுத்த தலைமுறை டிஸ்ப்ளேக்களை Elest நிறுவனம் தயாரிக்கும் என்று தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் தலைவர் ராஜேஷ் மேத்தா ஆகிய இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

தெலுங்கானா

தெலுங்கானா

தெலுங்கானாவில் உள்ள டிஸ்ப்ளே ஃபேப் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் சிறந்த உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கும் என்றும், விஞ்ஞானிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் மேத்தா கூறினார்.

தொழில்நுட்ப வளர்ச்சி

தொழில்நுட்ப வளர்ச்சி

Elest நிறுவனத்தின் ஆறாவது ஜெனரேசன் AMOLED டிஸ்ப்ளே இந்தியாவில் உற்பத்தி செய்வதால் அது உலகளாவிய ஆர்வத்தை உருவாக்கும் மற்றும் இந்தியாவின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை உறுதி செய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்.

உலக அளவில் இந்தியா

உலக அளவில் இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு டிஸ்ப்ளே ஃபேப் நிறுவனம் உருவாகியிருப்பதை அடுத்து இந்தியாவை உலக அளவில் அது உயர்த்தும் என்று அமைச்சர் கூறினார். மேலும் நம் மாநிலத்தில் டிஸ்ப்ளே ஃபேப் வைத்திருப்பது மாநிலத்தில் செழித்து வரும் எலக்ட்ரானிக்ஸ், ஐடி சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று அரசு நம்புகிறது என்றும், இங்கு உற்பத்தி செய்யப்படும் டிஸ்ப்ளேக்கள் சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் உற்பத்தியாகும் டிஸ்ப்ளேக்களுக்கு இணையானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+