சீனா இந்தியாவில் முதலீடு செய்வதில் தான் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை கடுமையாக்கியது இந்தியா. ஆனால் தற்போது இதுவரை சீனா எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்பதே குழப்பமாகத் தான் உள்ளது.
வாருங்கள் அதைப் பற்றித் தான் பார்க்க போகிறோம். பிசினஸ் டுடேவில் வெளியான செய்தி ஒன்றில், இந்தியாவில் சீனாவின் அன்னிய நேரடி முதலீடு எவ்வளவு என்பது குறித்து யாருக்கும் சரியாக தெரியவில்லை.
உண்மையில் அது யாருக்கும் தெரியாது? குறிப்பாக இரு நாட்டு அரசுகளுக்கும் அது தெரியாது. இப்படி ஒரு தெளிவின்மையே முதலீட்டு விதிகளை கட்டுப்படுத்த வழிவகுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
எவ்வளவு தான் முதலீடு
சீனாவில் இருந்து ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு 2.3 பில்லியன் டாலர் என இந்திய அரசு நம்புகிறது. இது கடந்த ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2019 வரையிலான காலத்திற்கான முதலீடு என்றும் DIPP வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் இந்த காலகட்டத்தில் சீனாவின் மொத்த நேரடி முதலீடு 0.5% தானாம்.
சீனா என்ன சொல்கிறது?
ஆனால் இதே சீனாவின் அறிக்கையின் படி, மேற்கண்ட அறிக்கைக்கு எதிராக, 8 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையான முதலீடு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஏனெனில் சீனாவில் இருந்து முதலீடுகள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற பிற இடங்களுக்கு முதலீடு செய்யப்படுகிறது.
ஸ்டார்டப்களில் முதலீடு
குறிப்பாக அலிபாபா, டென்சென்ட் மற்றும் ஆண்ட் பைனான்ஷியல் தலைமையிலான சீன முதலீட்டாளர்களும்வளர்ந்து வரும், இந்தியா ஸ்டார்டப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றன. வென்ச்சர் இண்டலிஜென்ஸின் கூற்றுப்படி, இந்தியாவில் 2019ம் ஆண்டில் மட்டும் சீனா 3.9 பில்லியன் டாலர்களை ஸ்டார்டப் களை முதலீடு செய்தது.
இவங்க சொல்லுறத பாருங்க?
ஆனால் ப்ரூக்கிங்ஸ் அறிக்கையின் படி, சீனாவின் முதலீடுகள் 26 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என கூறியுள்ளது. அதே சிங்கப்பூரிலிருந்து அன்னிய நேரடி முதலீடு 94.6 பில்லியன் டாலர்களாகவும், இதே ஹாங்காங்கில் இருந்து 4.2 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது.
அரசின் நடவடிக்கைக்கு காரணம்
ஆக இந்தியாவில் சீனா செய்துள்ள சரியான முதலீடுகளின் அளவை பெறுவது கடினம். ஆக இதில் வெளிப்படைத் தன்மை இல்லாதது தான் அரசாங்கத்தின் பீதிக்கு காரணமாக இருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை. ஆக கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியுள்ள நாடுகளில் உள்ள நிறுவனங்களில் நிதிப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் நிலையில், அவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவதாக பல நாடுகளும் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தியாவும் அன்னிய நேரடி முதலீடு விதிகளில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications