2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 2019ஐ விடவும் குறைவாகவே இருக்கும்..!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பு மருத்து மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையிலும், முக்கியமான நகரங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஐநா ஒரு முக்கிய ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 2019ஐ விடவும் குறைவாகவே இருக்கும்..!

கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வர்த்தகச் சந்தையை மீட்டு எடுக்க மத்திய அரசு பல கட்டங்களாகப் பல திட்டங்களை அறிவித்துள்ள போதிலும், 2019ஆம் ஆண்டு அதாவது கொரோனாவுக்கு முந்தைய ஆண்டில் இந்தியா எட்டிய வளர்ச்சியைக் கூட 2021ல் பெறாது இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 2019ஐ விடவும் குறைவாகவே இருக்கும்..!

யுனைடெட் நேஷன்ஸ் எக்னாமிக் அண்ட் சோசியல் கமிஷன் பார் ஏசியா அண்ட் பிசிபிக் பிரிவு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் தடுப்பு மருத்து மக்களுக்கு அளிக்கும் பணிகள் அதிகரித்து வந்தாலும், 2021ஆம் ஆண்டில் எக்னாமிக் அவுட்புட் அளவு 2019ஆம் ஆண்டை விடவும் குறைவாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஐநாவின் எக்னாமிக் அண்ட் சோசியல் கமிஷன் பார் ஏசியா அண்ட் பிசிபிக் ஆய்வறிக்கையில், கொரோனா காலத்தில் இந்திய பொருளாதாரம் 7.7 சதவீதம் அளவிற்குச் சரிந்திருந்த நிலையில் 2021-22ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனக் கணித்துள்ளது. இது இந்திய வர்த்தகச் சந்தைக்கும், முதலீட்டுச் சந்தைக்கும் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 2019ஐ விடவும் குறைவாகவே இருக்கும்..!

கொரோனாவை கட்டுப்படுத்த உலகிலேயே மிகவும் கடுமையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காரணத்தால் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் அதிகளவிலான பாதிப்பு எதிர்கொண்டது. இந்த லாக்டவுன் கட்டுப்பாடுகள் படிப்படியாகக் குறைந்து வர்த்தகச் சந்தை மீண்டு வந்த காரணத்தால் 2020-2021ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் மைன்ஸ் நிலையிலிருந்து 0 நிலையை அடைந்துள்ளது.

 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 2019ஐ விடவும் குறைவாகவே இருக்கும்..!

இந்திய பொருளாதாரம் வளர்ச்சிக்காக, வட்டி குறைப்பு, உற்பத்தி நிறுவனங்களுக்குச் சலுகை, வேலைவாய்ப்பு அதிகரிக்கப் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது மத்திய அரசு. இதேவேளையில் கொரோனா-வை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மக்களுக்குத் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படிப் பல காரியங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் 2021ல் 2019ஆம் ஆண்டு அளவீட்டை விடவும் குறைவாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளது எக்னாமிக் அண்ட் சோசியல் கமிஷன் பார் ஏசியா அண்ட் பிசிபிக் பிரிவின் ஆய்வறிக்கை.

 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 2019ஐ விடவும் குறைவாகவே இருக்கும்..!

மேலும் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள கணிப்புகளின் படி நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020-21ஆம் நிதியாண்டில் 8 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் ஐநாவின் ஆய்வறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் நாட்டின் முதலீட்டு சந்தை பெரிய அளவிலான பாதிப்பு எற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 2019ஐ விடவும் குறைவாகவே இருக்கும்..!

இதனால் இந்திய முதலீட்டு சந்தைக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகள் கணிசமாக குறையவும் வாய்ப்புகள் உள்ளது என்றால் மிகையில்லை. இந்தியாவில் ஏற்கனவே கொரோனா தொற்றின் 2வது அலை மிகவும் மோசமான நிலையை அடைந்து வரும் சூழ்நிலையில் நாட்டின் முதலீட்டு சந்தைகள் மந்தமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது.

 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 2019ஐ விடவும் குறைவாகவே இருக்கும்..!

2020-21ஆம் ஆண்டில் இந்தியா கொரோனா பாதிப்பு காரணமாக அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த நிலையில், இந்த ஆண்டு K வடிவிலான வளர்ச்சியை அடையும் என பல தரப்பு கணிப்புகள் கூறுகிறது. ஆனால் இது 2019ஆம் ஆண்டு பொருளாதார அளவீட்டை தாண்டுமா..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+