பெங்களூர்: இந்தியாவின் 4வது பெரும் பணக்கார பெண் மற்றும் இந்தியாவின் முன்னணி பயோ பார்மா நிறுவனமான பயோகான்-ன் நிறுவனரான கிரண் மஜும்தார்-ஷா கணவர் ஜான் ஷா திங்கட்கிழமை காலமானார்.
70 வயதான ஜான் ஷா உடல் நலம் பாதிப்புக் காரணமாகப் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். இவருடைய இறுதிச் சடங்குகள் பெங்களூரிலேயே நடந்தது.
ஜான் ஷா
ஜான் ஷா ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியா மீதும், இந்தியர்கள் மீது அதிகப்படியான பாசம், நேசம் காட்டுபவர். ஜான் ஷா 1999 ஆம் ஆண்டுப் பயோகான் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு ஜவுளி உற்பத்தி நிறுவனமான மதுரா கோட்ஸின் தலைவராக இருந்தார்.
பயோகான் நிறுவனம்
அவர் வெளிநாட்டு ப்ரோமோட்டர் மற்றும் பல்வேறு பயோகான் குழும நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். பயோகான் நிறுவனத்தில் ஜான் ஷா இந்த நிறுவனத்தில் சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார், ஜூலை 2021 இல் ஓய்வு பெற்றார். வியெல்லா குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.
ஜான் ஷா - கிரண் மஜும்தார்.
ஜான் ஷா கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார், இதே பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இதேவேளையில் ஆஸ்திரேலியாவில் மதுபானம் தயாரிப்பாதற்காகப் படித்து வந்தார் கிரண் மஜும்தார்.
கிரண் மஜும்தார்
பின்னாளில் மதுபானம், புட் பேக்கிங், டெக்ஸ்டைல் துறைக்குத் தேவையான enzymes தயாரிப்பதற்காக ஒரு வாய்ப்பு ஐயர்லாந்து நாட்டின் பயோகான் நிறுவனத்திடம் இருந்து கிரண் மஜும்தார்-க்கு வாய்ப்புக் கிடைத்தது.
பியோகான் இந்தியா துவக்கம்
1978ல் 10000 ரூபாய் முதலீட்டில் பியோகான் இந்தியா நிறுவனத்தைத் துவங்கி தனக்கான வெற்றி பாதையைத் தானே அமைத்துக்கொண்ட கிரண் மஜும்தார், 1998 இல் கிரண் மஜும்தார் மதுரா கோட்ஸின் தலைவராக இருந்த ஜான் ஷா-வை மணந்தார்.
கிரண் மஜும்தார் ஷா டிவீட்
இந்தியாவில் மட்டும் இயங்கி வந்த பயோகான் நிறுவனத்தை உலகளவில் கொண்டு செல்லும் பயணத்தில் முக்கியப் பங்காற்றியவர் ஜான் ஷா. எனது கணவர், எனது வழிகாட்டி மற்றும் ஆத்ம துணையை இழந்து தவிக்கிறேன் எனக் கிரண் மஜும்தார் ஷா தனது டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications