இந்திய ரிசர்வ் வங்கி மே 4-ம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக உயர்த்தியது. எனவே பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களும் விரைவில் உயரும் என தெரிவித்து இருந்தோம்.
அதை உறுதி செய்யும் விதமாக பல்வேறு முக்கிய வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. எனவே 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக லாபம் அளிக்கும் 5 வங்கிகள் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
கரூர் வைசியா வங்கி
கரூர் வைசியா வங்கியில் 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5.80 சதவீத வட்டி விகிதம் லாபம் அளிக்கிறது.
ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி
ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 6.25 சதவீத லாபம் கிடைக்கும்.
டிசிபி வங்கி
டிசிபி வங்கி 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 6.25 சதவீத வட்டி விகித லாபம் வழங்கப்படுகிறது.
ஆர்பிஎல் வங்கி
ஆர்பிஎல் வங்கியின் 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 6.30 சதவீத லாபம் கிடைக்கும்.
இண்டஸ்ஸ் இண்ட் வங்கி
மேலே கூறிய 5 வங்கிகளை விட அதிகமாக இண்டஸ்ஸ் இண்ட் வங்கி 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 6.50 சதவீத லாபத்தை அளிக்கிறது.
வருமான வரி விலக்கு
வருமான வரி விலக்கு வேண்டும் என நிணைப்பவர்கள், எல்.ஐ.சி, பிபிஎப், மியூச்சுவல் ஃபண்டு போன்ற திட்டங்களில் முதலீடு செய்தால் நீண்ட காலத்திற்கு எடுக்க முடியாது. எனவே வரி விலக்கு கிடைக்கவில்லை என்றாலும் வரி செலுத்திவிடலாம் என கருதுகின்றனர்.
ஆனால், 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80 சி கீழ் வரி விலக்கும் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பான முதலிடு
பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் என்ன வட்டி விகிதம் கூறப்படுகிறதோ அது அப்படியே முதிர்வு காலத்தின் போது கிடைக்கும். அதுமட்டுமல்லமால் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை போன்ற சந்தை ரிஸ்க் அபாயமும் இருக்காது. அவசர காலத்தில் இடையில் பணம் தேவைப்பட்டாலும் உடனே இணையதள வங்கி சேவை அல்லது வங்கி கிளையை அனுகி உடனே பணத்தை எடுத்து பயன்படுத்தலாம். எனவே பிக்சட் டெபாசிட் திட்டங்கள் வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும் பலர் இதில் பணத்தை சேமிக்கிறார்கள்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications