இந்திய பொருளாதாரம் 8 சதவீதத்திற்கும் மேல் வளர்ந்திருந்தாலும், உண்மையான பிரச்சனை வேறு என்று சாம்கோ குழுமத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான ஜிமீத் மோடி எச்சரித்துள்ளார்.
நாட்டின் உண்மையான வட்டி விகிதம் (real interest rate) கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.25 சதவீதமாக உயர்ந்துள்ளதால், nominal GDP வளர்ச்சி தடைபட்டு நிற்கிறது என்று அவர் கூறுகிறார்.

நாட்டின் ரியல் ஜிடிபி வளர்ச்சி வலுவாக இருந்தாலும், நாமினல் ஜிடிபி வளர்ச்சி மந்தமாக உள்ளது. இதனால் அரசின் வரி வசூல் குறைகிறது, நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படுகிறது, கடன் திருப்பிச் செலுத்தும் திறன் குறைகிறது என்று ஜிமீத் மோடி லைவ்மின்ட் பேட்டியில் சுட்டிக்காட்டுகிறார்.
பணவீக்கம் கிட்டத்தட்ட மொத்தமாக உடைந்துள்ள நிலையில் (அக்டோபர் மாதம் 0.25%), வட்டியை உயர்த்தி வைத்திருப்பது பணவாட்ட (deflation) அபாயத்தை ஏற்படுத்தும். அரசு பெரிய அளவில் செலவு செய்ய முடியாத நிலையில், முதலீட்டு செலவுகளும் குறைகின்றன. இதனால் பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என தெரிவித்துள்ளார்.
ரூபாய் மதிப்பு 90க்கு மேல் இருப்பதால் வட்டி குறைப்பது சற்று ஆபத்தாகத் தெரிந்தாலும், குறைந்த பணவீக்கம் அதை ஈடுசெய்யும். இது ஏற்றுமதியாளர்களுக்கு பயன் தரும், பொருளாதார வளர்ச்சி மீண்டும் புத்தூயிர் பெறும் என்று ஜிமீத் மோடி வலியுறுத்துகிறார்.
வட்டி குறைப்பால் நாமினல் ஜிடிபி வளர்ச்சி மீண்டும் வேகம் பெறும், கடன் சுமை குறையும், இந்தியாவின் வளர்ச்சி பாதை தொடரும் என்று சாம்கோ தலைவர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி இதை உடனே செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் சந்தை நிபுணர்கள் டிசம்பர் மாத கூட்டத்தில் ஆர்பிஐ வட்டி குறைப்பதற்கான வாய்ப்பு 50:50 என கணித்துள்ளதால், மக்கள் மத்தியிலும், பொருளாதாரா வல்லுனர்கள் மத்தியிலும் ஆர்பிஐ முடிவுகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications