கைக்கடிகாரங்கள் என்பது வெறுமனே நேரம் பார்ப்பது மட்டுமின்றி நமது உடல் நிலையை கண்காணிப்பது, போன் கால்களை அட்டென்ட் செய்வது, எஸ் எம் எஸ் களை பார்ப்பது என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் கடிகாரங்களாக மாறிவிட்டன.
அந்த வகையில் இந்திய சந்தையில் ஸ்மார்ட் வாட்ச் களுக்கான வரவேற்பு என்பது அதிகமாகவே இருக்கிறது .இந்தியாவில் 5 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட் வாட்ச்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Huawei Watch FIT Smartwatch: உடலை ஃபிட்டாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது இது. 1.64 இன்ச் டிஸ்பிளே, 10 நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும் தன்மை, வேகமாக சார்ஜ் ஏறும் வசதி ஆகியவற்றை கொண்டது. இதில் 96 உடற்பயிற்சி அமைப்புகள் உள்ளன. எனவே உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றது. அமேசானில் இது 4,800 ரூபாய்க்கு கிடைக்கிறது. பேட்டரி நீடிக்கும் தன்மை, உடற்பயிற்சிக்கு ஏற்றது போன்ற அம்சங்களால் இது சிறந்த ஸ்மார்ட் வாட்ச்சாக கருதப்படுகிறது.
Noise ColorFit Ultra 3: அமேசானில் 3,900 ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு சிறந்த ஸ்மார்ட் வாட்ச் இது. 1.96 இன்ச் டிஸ்பிளே கொண்டது. எளிதில் மற்ற சாதனங்களுடன் கனெக்ட் ஆகிவிடும். நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி, ஏக்டிவிட்டி டிராக்கர், கலோரி டிராக்கர்மற்றும் ஆக்ஸிமீட்டர் ஆகியவை அம்சங்களை கொண்டுள்ளது. பார்ப்பதற்கும் ஸ்டிலைலாக இருக்கிறது என பயனாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஜிபிஎஸ் வசதி இல்லாதது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.
Fire-Boltt Quest Smartwatch: அமேசானில் பெரும் தள்ளுபடியில் சுமார் 2 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. ஸ்டைல், ஃபெர்மாஃபன்ஸ் என அனைத்திலுமே இது பாஸ் மார்க் பெறுகிரது. 1.39 இன்ச் டிஸ்பிளே, ஜிபிஎஸ் இணைப்பு, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, போன் அட்டன் செய்யும் அம்சம் , 100 ஸ்போர்ட்ஸ் மோடுகள், தண்ணீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாப்பு, உடல்நிலை கண்காணிப்பு, ரத்த அழுத்த கண்காணிப்பு, இதய துடிப்பு கண்காணிப்பு என சிறந்த பட்ஜெட்டில் பல நவீன அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் வாட்ச் இது.
realme Smart Watch S: அமேசானில் இதனை 2,249 ரூபாய்க்கு வாங்கலாம். 1.3 இன்ச் எல்சிடி ஸ்கிரீன், இதய துடிப்பு கண்காணிப்பு, ஆக்சிஜன் அளவு கண்காணிப்பு என பல அம்சங்களை கொண்டுள்ளது. போனுடன் இணைத்துவிட்டால் அனைத்து நோட்டிபிகேஷன்களையும் பெறலாம். மியூசிக் கண்ட்ரோல், கேமராவுடன் இணைக்கும் வசதி, 15 நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும் திறன், வேகமாக சார்ஜ் ஏறும் தன்மை கொண்ட சந்தையில் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் இது. இண்டர்னெல் மெமரி இல்லாதது ஒரு குறையாக உள்ளது.
CrossBeats Ignite S5: அமேசான் தளத்தில் இதனை 2,999 ரூபாய்க்கு வாங்கலாம். 1.96 இன்ச் டிஸ்பிளே கொண்டது. சுமார் 100 ஸ்போர்ட்ஸ் மோடுகள் இருப்பதால் உடற்பயிற்சிகளுக்கு ஏற்ற ஒரு ஸ்மார்ட்வாட்ச் இது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட ஹெல்த் டிராக்கிங் வசதி, உங்களின் தூக்கம், இதய துடிப்பு, உடலில் ஆக்சிஜன் அளவு என அனைத்தையும் துல்லியமாக கூறிவிடும். ப்ளூடூத் மூலம் போன் கால்களை அட்டன் செய்யும் வசதி இருக்கிறது. ஆனால் இதன் பேட்டரி விரைவில் காலியாவதாக புகார்கள் இருக்கின்றன.
Amazfit Zepp E: அமேசானில் இதனை 4,999 ரூபாய்க்கு வாங்க முடியும். சிறந்த ஸ்டைல் கொண்ட வாட்ச் என பெயர் பெற்றது. உங்களுக்கென தனிப்பயனாக்கப்பட்ட முறையில் உடல்நிலையை கண்காணித்து அறிக்கைகளை வழங்க கூடியது. பேட்டரி நீடிக்கும் தன்மை, எளிதாக பயன்படுத்தும் அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் ஜிபிஎச் வசதி இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications