இந்தியாவில் உள்ள பலர் ஏதோ ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து மாதம் சம்பளம் பெற்று வருகின்றனர். சம்பளம் மட்டும் வழங்கி விட்டால் போதுமா? ஒரு நிறுவனத்தின் தரப்பில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டியது என்னென்ன? என்பது குறித்தும் ஆராய்வது முக்கியம். ஏனெனில் அதிக சம்பளம் வழங்கப்பட்டாலும் தங்களுடைய பணியில் வளர்ச்சி மற்றும் மனநிறைவு சிலருக்கு இருக்காது. அதே நேரம் சில இடங்களில் நல்ல பணி சூழல், மனநிறைவு இருக்கும். ஆனால் போதிய ஊதியம் இருக்காது. இப்படி பல பிரச்சனைகளை பலதரப்பட்ட ஊழியர்களும் எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆக சம்பளம், மனநிறைவு, சிறந்த பணிச் சூழல், தேவைப்பட்டால் விடுப்பு என அனைத்தையும் வழங்கக்கூடிய நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பதுதான் பலரின் கனவு. இதனால் எந்தெந்த நிறுவனங்களுக்கு அதிகமான ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளதோ, அந்த நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கும் நபர்களும் உள்ளனர். அதற்கு ஏதுவாக சமீபத்தில் பிளைண்ட் என்ற நிறுவனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

அந்தப் பட்டியலில் அதிக ரேட்டிங் கொண்ட நிறுவனங்கள் மற்றும் குறைந்த ரேட்டிங் கொண்ட நிறுவனங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்கள் சிறந்த மதிப்பீடு பெற்ற முதல் 10 நிறுவனங்களில் உள்ளது. சில்லரை விற்பனை நிறுவனமான டார்கெட் பணிபுரிய உகந்த நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து Nvidia நிறுவனம் 2-வது இடத்தில் உள்ளது.
இதில் அமேசான் இந்தியா நிறுவனம் மோசமான மதிப்பீடு பெற்ற நிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதோடு பேடிஎம், காயின் பேஸ், ஐபிஎம், Sprinklr, InMobi போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் மிகக் குறைந்த ரேட்டிங் கொண்ட நிறுவனத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
பிளைண்ட் நிறுவனத்தின் இந்தப் பட்டியல் கடந்த ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட 7,020 நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ரிவ்யூக்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் 6 பிரிவுகளின் கீழ் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த பட்டியலிலும் ப்ளைண்ட் நிறுவனம் ஒரு முக்கியமான கருத்தை முன் வைத்துள்ளது. அது என்னவென்றால் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் சராசரி ஆண்டு சம்பளம் 32,250 டாலர்கள். ஆனால் இது இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்களின் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் 29 சதவீதம் குறைவு.
பெரும்பாலான இந்திய நிறுவனங்களே அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை விட அதிக சம்பளம் வழங்குகின்றன. ஆனால் சிறந்த பணி சூழ்நிலை கொண்ட நிறுவனமாக இந்நிறுவனம் மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் அந்நிறுவனத்தின் கலாச்சாரம், நிர்வாகத்தின் மீதான ஊழியர்களின் நம்பிக்கை போன்ற அம்சங்களாக இருக்கலாம்.
அதேநேரம் அதிக சம்பளம் வழங்கும் நிறுவனங்களில் காயின் பேஸ் நிறுவனமும் ஒன்று. ஏனெனில் இங்கு வழங்கப்படும் சராசரி ஆண்டு சம்பளம் 82,000 டாலர். இது இந்திய நிறுவனங்கள் வழங்கும் ஊதியத்தை விட 12 சதவீதம் அதிகம். இருந்த போதிலும் காயின் பேஸ் பணிபுரிவதற்கு மோசமான இடமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து பிளைண்ட் நிறுவனம் ஒரு முக்கியமான கருத்தை முன் வைத்தது. அதுதான் ஒரு ஊழியர் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு வெறும் சம்பளம் மட்டும் போதாது. மாறாக மனநிறைவு, நல்ல பணி சூழல், கலாச்சாரம், தொழில் வளர்ச்சி, வேலை-வாழ்க்கை சமநிலை போன்ற பிற காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தெரிவித்துள்ளது.
நிறுவன கலாச்சாரத்தின் அடிப்படையில் டார்கெட், என்விடியா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், அகமாய் டெக்னாலஜிஸ், சர்வீஸ்நவ், ஜோஹோ, அரிஸ்டா நெட்வொர்க்ஸ், மோர்கன் ஸ்டான்லி, விஎம்வேர் மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் & கோ போன்ற நிறுவனங்கள் சிறந்த பணிச் சூழலை வழங்கும் நிறுவனங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல 2024-ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் அமேசான், கூகுள், மேட்டா, மைக்ரோசாப்ட், ஆப்பிள், என்விடியா, பைட் டான்ஸ், நெட்ஃபிளிக்ஸ், ஓபன்ஏஐ மற்றும் வால்மார்ட் ஆகிய நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன.
குறைந்த மதிப்பீடு பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் டிபி வேர்ல்ட், மைண்ட் டிக்குள், பேடிஎம், இன்மொபி, மீடியா டாட் நெட், டேக்கியன் கார்ப், ஸிட்டா, காயின் பேஸ், அமேசான் போன்ற நிறுவனங்கள் இணைந்துள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications