டெல்லி: இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் பெரிய பெரிய மால்களின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு மெட்ரோ நகரப் பகுதிகளில் மால்களை கட்டமைத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய மால் டெல்லியில் அமைய இருக்கிறது.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை சுற்றி மிகப்பெரிய கட்டமைப்புகள் கொண்டு வரப்பட உள்ளன. அதாவது விமான நிலையத்திற்கு அருகிலேயே அனைத்து வசதிகளும் கொண்ட ஏரோசிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மிகப்பெரிய மால் இடம்பெறும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் ஏரோ சிட்டி சூப்பர் மால் 2027 ஆம் ஆண்டு முதல் செயல்பட இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது லக்னோவிலில் உள்ள லூலு மால் தான் மிகப்பெரிய மால் பெயரை பெற்றுள்ளது.
நொய்டாவில் உள்ள டிஎல்எஃப் மால் இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் அமைய இருக்கும் ஏரோ சிட்டி மால் இந்தியாவின் மிகப்பெரிய மாலாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.
டெல்லி விமான நிலையத்திற்கு அருகே அமைய இருக்கும் ஏரோசிட்டியில் 15 லட்சம் சதுர அடி அளவில் லீஸுக்கான இடம் உள்ளது . இதில் கூடுதலாக 65 லட்சம் சதுர அடி சேர்க்கப்படும் என்றும், இங்கே புது பொதுமக்களுக்கான இடங்கள், சில்லறை விற்பனை கடைகள், உணவகங்கள் மற்றும் மிகப்பெரிய மால் ஆகியவை அமைய உள்ளன என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனிடையே 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் இந்த மாலின் கட்டமைப்பு பணிகள் நடைபெறும் என தெரிகிறது.
இந்த மால் அமையும் பட்சத்தில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஏரோ சிட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய மால் செயல்பாட்டுக்கு வரும் இதன் அளவு கிட்டத்தட்ட 28 லட்சம் சதுர அடியாக இருக்கும் என தெரிகிறது. 2029 ஆம் ஆண்டுக்குள் ஏரோ சிட்டியின் வணிக கட்டடங்களுக்கான இடத்தின் அளவு 1 கோடி சதுர அடியாக உயர்த்தப்படும் என தெரிகிறது. பாரதி ரியால்டி நிறுவனம் இந்த கட்டமைப்புக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே ஏரோசிட்டியில் தற்போது 5,000 அறைகள் கொண்ட 11 தங்குமிடங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாரதி ரியால்டி நிறுவனம், இரண்டாம் கட்ட பணிகளின் போது தங்குமிடங்களின் எண்ணிக்கை 16ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த பணிகளும் 2027ஆம் ஆண்டில் நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications