'இந்த' விஷயத்தில் தமிழ்நாடு ரொம்ப மோசம்.. ஆனா கோவா மாஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலருக்கும் கார் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதன் விலை மற்றும் மெயின்டனென்ஸ் செலவுகளுக்குப் பயந்து பலரும் சொத்து வாங்குவதைத் தவிர்க்கும் நேரத்தில், உலகிலேயே ஆட்டோமொபைல் உற்பத்திக்குப் பெயர்போன நாடாக இந்தியா உள்ளது.

 

இந்த நிலையில் இந்தியாவில் எந்தெந்த மாநிலத்தில் மக்கள் அதிகக் கார்களை வைத்துள்ளனர் என 2019-21 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வுகளின் விபரங்கள் அடிப்படையில் இதைத் தரவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

3000 ஏக்கர் கைப்பற்றும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு.. எதற்காக..? 3000 ஏக்கர் கைப்பற்றும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு.. எதற்காக..?

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்தியாவில் கார் உற்பத்திக்கு பெயர் போன தமிழ்நாட்டில் வெறும் 6.5 சதவீத குடும்பங்கள் மட்டுமே சொந்த கார் வைத்துள்ளனர். இதுவே அண்டை மாநிலமான கேரளாவில் சுமார் 24.2 சதவீத குடும்பங்கள் சொந்தமாகக் கார்களை வைத்துள்ளனர், கர்நாடகா 9.1 சதவீதம், தெலுங்கானா 6.5 சதவீதம், ஆந்திரா 2.8 சதவீத மக்கள் சொந்தமாகக் கார் வைத்துள்ளனர்.

கோவா முதல் இடம்

கோவா முதல் இடம்

இந்தியாவில் அதிகப்படியான குடும்பங்கள் சொந்தமாகக் கார்களை வைத்துள்ள மாநிலமாகக் கோவா முதல் இடத்தில் உள்ளது, இந்த மாநிலத்தில் சுமார் 45.2 சதவீதம் குடும்பங்கள் சொந்தமாகக் கார் வைத்துள்ளனர்.

முன்னணி மாநிலங்கள்
 

முன்னணி மாநிலங்கள்

இதே தொடர்ந்து கஷ்மீரில் 23.7 சதவீதம், ஹிமாச்சல பிரதேசத்தில் 22.1 சதவீதம், பஞ்சாப் 21.9 சதவீதம், சிக்கிம் 20.9 சதவீதம், அருணாச்சல பிரதேசம் 19.3 சதவீதம், நாகாலாந்தில் 21.3 சதவீதம், மணிப்பூர் 17 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறது.

பொருளாதாரம், வர்த்தகம்

பொருளாதாரம், வர்த்தகம்

மேலும் பொருளாதாரம், வர்த்தக ரீதியில் முன்னோடியாக இருக்கும் மாநிலங்கள் எனக் கூறப்படும் குஜராத்தில் 10.9 சதவீதம், மகாராஷ்டிரா 8.7 சதவீதம் குடும்பங்கள் சொந்தமாகக் கார் வைத்துள்ளனர்.

கார் ஓனர்ஷிப்

கார் ஓனர்ஷிப்

இதே தொடர்ந்து கார் ஓனர்ஷிப்-ல் மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கும் மாநிலங்களாக ஆந்திர பிரதேசம் 2.8 சதவீதம், ஒடிஷா 2.7 சதவீதம், மேற்கு வங்காளம் 2.8 சதவீதம், பீகாரில் 2 சதவீதம் உடன் கடைசியில் உள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா சுமார் 10000 கோடி ரூபாய் முதலீட்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய தொழிற்சாலையை எலக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதற்காகப் பிரத்தியேகமாக அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சலுகை

சலுகை

இந்த மாபெரும் தொழிற்சாலை மஹிந்திரா நிறுவனம் மகாராஷ்டிரா மாநில அரசின் தொழிற்துறை ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அமைக்க உள்ளது, இதன் மூலம் பல சலுகைகளைப் பெற உள்ளது.

பாதுகாப்பான கார்

பாதுகாப்பான கார்

 

மேலும் இந்தியாவில் பாதுகாப்பான கார் பட்டியல் வெளியானது அதில் டாப் 10 இடங்களைப் பெற்ற கார்களின் பட்டியல் இதுதான், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கார் உங்களிடம் இருந்தால் கட்டாயம் லைக் பண்ணி கமெண்ட் பண்ணுங்க.

மதிப்பீடு

மதிப்பீடு

ஒவ்வொரு வகைக் கார்களுக்கும் பரிசோதனை முறை உள்ளது, அந்த வகையில் டாப் 10 இடத்தில் இருக்கும் ஒவ்வொரு காரும் எத்தனை மதிப்பெண் வாங்கியுள்ளது எனப் பாருங்க.

டாப் 10 கார்கள்

டாப் 10 கார்கள்

வோக்ஸ்வாகன் டைகன் இந்தக் கார் 83க்கு சுமார் 71.64 மதிப்பெண் பெற்று டாப் 10 பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்கோடா குஷாக் - 71.64/83, மஹிந்திரா ஸ்கார்பியோ N - 58.18/83, டாடா பஞ்ச் - 57.34/66, மஹிந்திரா XUV300 - 53.86/66, டாடா அல்ட்ராஸ் - 45.13/66, டாடா நெக்ஸான் - 41.06/66, மஹிந்திரா XUV700 - 57.69/66, ஹோண்டா ஜாஸ் - 45.43/66, டொயோட்டா அர்பன் க்ரூஸர் - 50.20/66 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

5 ஸ்டார் ரேட்டிங்

5 ஸ்டார் ரேட்டிங்

வோக்ஸ்வாகன் டைகன், ஸ்கோடா குஷாக், மஹிந்திரா ஸ்கார்பியோ N ஆகிய 3 கார்களும் Adult Safety Points, Child Safety Points ஆகிய பிரிவில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

குஜராத், தமிழ்நாடு.. யாரு பெஸ்ட்..? தேர்தலுக்கு முன் குஜராத் நிலைமை என்ன..?! குஜராத், தமிழ்நாடு.. யாரு பெஸ்ட்..? தேர்தலுக்கு முன் குஜராத் நிலைமை என்ன..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Car ownership data; Goa tops list, Check Tamilnadu

India's Car ownership data; Goa tops list, Check Tamilnadu
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X