இந்தியாவில் டிஜிட்டல் பேமன்ட்டுகள் அதிகரித்திருந்தாலும் பணப்புழக்கம் தொடர்ந்து உச்சத்தில் தான் இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தது. இந்த நடவடிக்கை தொடர்ந்து இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க தொடங்கியது.
2016ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய சந்தையில் பேடிஎம், ஜிபே , பீம் யுபிஐ ஆகியவை ஆதிக்கம் செலுத்த தொடங்கின. அந்த வகையில் தற்போது இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் யுபிஐ பரிமாற்றம் வந்து விட்டது. கியூஆர் கோடு அல்லது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை குறிப்பிட்டால் போதும் நாம் எளிதாக யாருக்கும் வேண்டுமானாலும் பணம் அனுப்பி விடலாம். இப்படி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாகி இருந்தாலும் ரொக்கமாக பணத்தை புழங்கும் பழக்கம் நீடிக்கிறது.

Ravisutanjani என்பவர் நிதி சார்ந்த இன்ஃப்ளூயன்சராக இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்துவருவதாக குறிப்பிடுகிறார். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் பணப்புழக்கம் 13.35 லட்சம் கோடி ரூபாய், அதுவே 2025 ஜனவரியில் இந்தியாவில் பணப்புழக்கம் 35.99 லட்சம் கோடி ரூபாய் என குறிப்பிட்டு இருக்கிறார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து இருந்தாலும் பணப்புழக்கம் 8 ஆண்டுகளில் 2.5 மடங்கு உயர்ந்திருக்கிறது என அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 2025 பிப்ரவரி 7ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் பணப்புழக்கம் 36.36 லட்சம் கோடிகளாக இருக்கிறது என தெரிவித்திருந்தது . கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பணப்புழக்க வீதம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. பண மதிப்புமிக்க நடவடிக்கை, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றால் நாட்டில் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கூறி வந்தனர். ஆனால் அதற்கு எதிர்மாறாக பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது என்பதை இந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கையில் எடுத்தது. அதற்கு முன்பு நாட்டில் பணப்புழக்கம் மதிப்பு 16.5 லட்சம் கோடியாக இருந்தது. இது ஒருபுறம் இருந்தாலும் நாட்டில் யுபிஐ பரிவர்த்தனைகள் 10 மடங்கு அதிகரித்து இருக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் 2023 - 24 ஆம் ஆண்டில் 159 பில்லியன் ஆக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 2028- 29ஆம் ஆண்டில் 481 பில்லியன்களாக மூன்று மடங்கு உயரும் என சொல்லப்படுகிறது. இதனிடைய நாட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதற்கு பொருளாதாரம் சீராக இருப்பது ஒரு காரணமாகவும் குறைந்த மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளை மக்கள் ரொக்கமாகவே கையாளுவதே காரணம் என்றும் கூறப்படுகிறது. ஜிஎஸ்டியில் இருந்து தப்புவதற்கு கூட சிலர் ரொக்க பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications