இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 11.6 சதவீதம் அதிகரித்து, 19.04 மில்லியன் டன்னாக செப்டம்பரில் அதிகரித்துள்ளது.
இது இந்தியாவில் வளர்ச்சி அதிகரித்து வருவதற்கான அறிகுறியையே காட்டுகிறது. ஏனெனில் கடந்த செப்டம்பர் 2019ல் கூட இது 17.06 மில்லியன் டன்னாக இருந்தது.
பண்டிகை காலத்திற்கு முன்னதாக இந்த தேவை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் தேவை அதிகரித்து வரும் நிலையில், இது இன்னும் தேவை மீண்டெழுவதற்கு வழிவகுக்கும் என்று, டாடா ஸ்டீல் மற்றும் செயில் நிறுவன்ங்களின் கூட்டமைப்பான எம்ஜங்ஷன் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் மாதங்களில் செயல்பாடுகளின் நிலைத் தன்மை மற்றும் நுகர்வுத் துறைகளின் வளர்ச்சியினைப் பொறுத்தது என்பதால், இறக்குமதி இன்னும் நிலையற்றதாக உள்ளது எனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்த இறக்குமதியில் குக்கிங் அல்லாத நிலக்கரி ஏற்றுமதி 11.97 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 11.81 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே குக்கிக் நிலக்கரி கடந்த நிதியாண்டில் 3.54 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 4.58 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது
செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி இறக்குமதி அதிகரித்திருந்தாலும், கடந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 125.35 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 95.30 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது.
ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் மொத்த நிலக்கரி மற்றும் குக்கிங் இறக்குமதி 95.30 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 23.97 குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 34.9 சதவீதம் குறைந்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாகவே சரிவில் இருந்து வந்த நிலக்கரி ஏற்றுமதி, தற்போது தான் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இது முழுவதுமாக கொரோனாவுக்கு முன்பை போல் மீண்டு வர இன்னும் சில காலம் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications