இந்தியாவின் பெரு நகரங்களில் வீட்டு வாடகை தாறுமாறாக உயர்ந்து வரும் வேளையில் பலரும் சமுக வலைத்தளத்தில் புலம்பி தள்ளுவது மட்டும் அல்லாமல் மாத சம்பளத்தில் பெரும் பகுதியை வீட்டு வாடகைக்கு செலுத்த வேண்டிய நிலை இருப்பதால் தற்போது பலர் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் கேட்டு சொந்த ஊருக்கே செல்ல முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை அதிகமாக இருப்பதும் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வாடகை இருப்பதும் புதிய விஷயமும் இல்லை, பெரிய விஷயமும் இல்லை. ஆனால் இங்கு விநோதம் என்னவென்றால் வெறும் 1 பெட்ரூம் கொண்ட வீட்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வாடகை என்பது தான்.

மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு வாடகை வசூலிக்கும் வீடு எங்கு உள்ளது..? சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் இதில் எந்த நகரம் கெஸ் பண்ணுங்க..?
தெற்கு மும்பை பகுதியில் கார்மைக்கேல் சாலையில் இந்த காஸ்ட்லியான 1BHK வீடு உள்ளது. இந்தியாவின் மிகவும் விலையுர்ந்த சாலைகளில் முக்கியமானவை இந்த கார்மைக்கேல் சாலை, இங்கு மூத்த அரசியல் தலைவர்கள் முதல் பணக்கார பிஸ்னஸ்மேன் வரையில் பலர் உள்ளனர். இதனாலேயே இப்பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு அதிகப்படியான வாடகை வசூலிக்கப்படுகிறது.
பொதுவாக இத்தகைய ஆடம்பரமான பகுதிகளில் வாடகைக்கு வீடு இருக்க வாய்ப்புகள் குறைவு, அப்படி இருந்தாலும் அதிகப்படியான வாடகை வசூலிப்பது தவிர்க்க இயலாது. இந்த நிலையில் இந்த மும்பை கார்மைக்கேல் சாலையில் உள்ள 1 BHK வீட்டு வெறும் 700 சதுரடி மட்டுமே கொண்டு உள்ளது.
மும்பையில் சராசரி வீட்டை காட்டிலும் 2 மடங்கு பெரியதாக இந்த வீடு உள்ளது, இதைவிட முக்கியமாக இந்த வீடு சீலிங் உயரம் மிகவும் அதிகம். குறைந்தது 100 வருடத்திற்கு பழமையான கட்டிடம் என்பதால் பாரம்பரியமிக்கதாக உள்ளது. இந்த வீட்டின் மாத வாடகை 1.2 லட்சம் ரூபாய்.
மேலும் 1.2 லட்சம் மாத வாடகை என்பது 2022 நிலவரம், 2023ல் கட்டாயம் 1.5 லட்சம் ரூபாய் வரையில் உயர்ந்திருக்கு வாய்ப்புகள் அதிகம். காரணம் 2023 ஆரம்பம் முதல் வாடகை வீட்டுக்கான டிமாண்ட் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் வாடகையும் அதிகளவில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications