இஷ்டத்துக்கு கிரெடிட் கார்டை தேய்த்து தள்ளும் மக்கள்.. ஜனவரி மாதத்தில் ரூ.1,84,100 கோடி செலவு!

உடனடி பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கிரெடிட் கார்டுகள் தான் பலரின் உற்ற தோழனாக இருந்து வருகிறது. வசதியான பரிவர்த்தனை முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை கிரெடிட் கார்டுகள் பல நன்மைகளை வழங்குகின்றன. இதன் காரணமாகவே இந்தியாவில் கிரெடிட் கார்டின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அசித் சி மேத்தா இன்வெஸ்ட்மென்ட் இன்டர்மீடியட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கிரெடிட் கார்டு செலவினங்கள் தொடர்பான அறிக்கையில், ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் மக்கள் செலவு செய்த தொகை ரூ.1,84,100 கோடியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகமாகும்.

2025-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மொத்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனையின் அளவு 430 பில்லியனாக உள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகமாகும். ஜனவரி மாதத்தில் இந்தியாவில் நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 10.9 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 12 லட்சம் கார்டுகள் குறைந்துள்ளது. டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டின் பயன்பாடு குறைந்தாலும், வருடாந்திர அடிப்படையில் அதிகரித்து வருகிறது.

இஷ்டத்துக்கு கிரெடிட் கார்டை தேய்த்து தள்ளும் மக்கள்.. ஜனவரி மாதத்தில் ரூ.1,84,100 கோடி செலவு!

இதே போல ஒரு பரிவர்த்தனையின் சராசரி செலவு 4,282 ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் குறைந்துள்ளது. நுகர்வோரின் செலவு செய்யும் பழக்கம் மாறி வருவதையும் இதை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம். மக்கள் பெரிய தொகையை ஒரே நேரத்தில் செலவு செய்வதை விட சிறு தொகையாக பல பரிவர்த்தனைகளின் மூலம் செலவு செய்கின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.

அதோடு முன்னணி வங்கிகள் கிரெடிட் கார்டு பிரிவில் தொடர்ந்து தங்களுடைய இருப்பை வலுப்படுத்தி வருகின்றன. HDFC பேங்க் தீவிரமாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் உத்திகளின் மூலம் கடந்த ஆண்டில் அதன் சந்தை பங்கை 20.2 சதவீதத்திலிருந்து 21.5 சதவீதமாக அதிகரித்தது. SBI பேங்க் தனது சந்தை பங்கில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு 18.8 சதவீதமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் எஸ்பிஐ 2,40,000 புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது. ஐசிஐசிஐ பேங்கின் சந்தை பங்கு 16.3 சதவீதத்திலிருந்து 16.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

என்னதான் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரிப்பது ஒரு வசதியான விஷயமாக தோன்றினாலும், இது ஒரு ஆபத்தான போக்கையும் சுட்டிக் காட்டுகிறது. மக்கள் தங்கள் சேமிப்புகளை குறைத்து கிரெடிட் கார்டு மூலம் அதிக செலவு செய்கிறார்கள் என்பதும் இதை வைத்து நான் தெரிந்து கொள்ளலாம். அதோடு வீட்டு சேமிப்பு குறைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குடும்பங்களின் நிதி நிலை குறித்த பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடன் சுமையில் சிக்காமல் இருக்கவும், உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கவும் அதற்கு ஏற்றார் போல் திட்டமிட வேண்டும். சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கிரெடிட் கார்டுகளை கவனமாக பயன்படுத்துங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+