நொய்டா: யூடியூபில் சமையல் வீடியோ போடுவதன் மூலம் 43 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் பெண்மணி குறித்து தற்போது பலரும் பெருமையாக பேசி வருகின்றனர். 65 வயதாகும் அவர் ஆசிரியர் பணியை விட்டு முழு நேர யூடியூபராக மாறி விட்டார்.
யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் தற்போது பலருக்கும் வருமான ஆதாரங்களாக மாறியுள்ளன. பலரும் தங்களுடைய திறன்களை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இந்த செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நிஷா மதுலிகா என்பவர் ஒரு ஆசிரியராக இருந்து யூடியூபராக மாறியவர். தற்போது அவர் யூடியூப் வாயிலாக மட்டும் 43 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
65 வயதில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி மில்லியன் கணக்கான ஃபாலோவர்களையும் பெற்றிருக்கிறார். இந்திய உணவு வகைகள் குறித்து யூடியூபில் தேடுபவர்களுக்கு கண்டிப்பாக நிஷாவின் பக்கத்தை பார்த்திருப்பார்கள். பிரபலமான உணவு தயாரிப்பு வீடியோக்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வருபவர் தான் நிஷா மதுலிகா. புகழ்பெற்ற பெண் யூடியூபராகவும் இருக்கிறார். இவரை யூடியூப் தளத்தில் 14.5 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர் தான் நிஷா மதுலிகா. சிறுவயதிலிருந்தே இவருக்கு உணவு சமைப்பதில் ஆர்வம் அதே போல புதுவகையான உணவுகளையும் இவர் முயற்சி செய்து பார்ப்பாராம்.
ஒரு ஆசிரியராக பணிக்கு சென்று வந்த இவர் கடந்த 2011ஆம் ஆண்டு சாதாரணமாக யூட்யூபில் சமையல் வீடியோக்களை செய்து பதிவிட்டுள்ளார். ஆனால் அடுத்தடுத்த நாட்களிலேயே அவருடைய சேனலை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.
100 இல் தொடங்கி ஆயிரம், லட்சம், 10 லட்சம் என அவருடைய ஃபாலோவர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 65 வயதாக கூடிய நிஷா மதுலிகாவின் முக்கியமான நிதி ஆதாரமாக அவருடைய யூடியூப் சேனல் மாறி இருக்கிறது. எளிமையான வார்த்தைகளை பயன்படுத்தி அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் விவரித்து அவர் தன்னுடைய உணவு தயாரிப்பு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது நொய்டாவில் வசித்து வரும் அவர் தன்னுடைய வருமானத்தின் மூலம் தன்னுடைய கணவர் புதிதாக தொழில் தொடங்குவதற்கு உதவி செய்கிறாராம் .அதேபோல தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்காகவும் அதனை பயன்படுத்துகிறாராம். கடந்த 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் வேலையை கைவிட்டு யூடியூப் சேனலை தொடங்கிய இவர் 2017 ஆம் ஆண்டில் Social Media Summit & Awardsஇல் Top YouTube Cooking Content Creator என்ற விருதையும் வென்றுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications