இந்தியாவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை (CAD) செப்டம்பர் 2022 காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய காலாண்டில் அதாவது ஜூன் காலாண்டில் ஜிடிபியில் 2.2 சதவீதமாக இருந்தது.
செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் நிலவிய அதிகப்படியான வர்த்தகப் பற்றாக்குறை காரணமாகவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாகவும் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி இந்தியாவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை (CAD) செப்டம்பர் 2022 காலாண்டில் 4.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆர்பிஐ
ஆர்பிஐ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி 2023 ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்தியாவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்க முக்கியக் காரணமாக இருந்தது வர்த்தகப் பற்றாக்குறை தான். 2வது காலாண்டில் வர்த்தகப் பற்றாக்குறை 83.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 63 பில்லியன் டாலராக இருந்தது.
வர்த்தகப் பற்றாக்குறை, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி
2022-23 ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக நடப்பு கணக்குப் பற்றாக்குறை அளவு செப்டம்பர் காலாண்டில் 36.4 பில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது. ஜிடிபி அளவில் இது 4.4 சதவீதமாகும். இதுவே முதல் காலாண்டில் 18.2 பில்லயன் டாலர், கடந்த நிதியாண்டின் இதே செப்டம்பர் காலாண்டில் 9.7 பில்லியன் டாலராக இருந்தது.
சேவை துறை
2022-23 ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்தலும், மென்பொருள், வணிகம் மற்றும் பயணச் சேவைகளின் ஏற்றுமதி அதிகரித்து வருவதன் மூலம் சேவை துறை ஏற்றுமதிகள் கடந்த ஆண்டை காட்டிலும் 30.2 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
அன்னிய நேரடி முதலீடு
நிதிக் கணக்கில், நிகர அன்னிய நேரடி முதலீடு ஒரு வருடத்திற்கு முன்பு 8.7 பில்லியன் டாலரில் இருந்து 6.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதேபோல் நிகர வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகள் 6.5 பில்லியன் டாலராகப் பதிவு செய்துள்ளது, இது கடந்த காலாண்டில் 3.9 பில்லியன் டாலராக இருந்தது.


Click it and Unblock the Notifications