இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா.. உண்மையை புட்டு புட்டு வைத்த அறிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிசர்வ் வங்கி 26வது நிதி நிலைத்தன்மை அறிக்கையை (FSR) இன்று வெளியிட்டுள்ளது. இதில் சர்வதேச பொருளாதாரம் எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு மத்தியில், ரெசசன் அச்சம் எழுந்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

தொடர்ந்து சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்திய மத்திய வங்கியானது மானிட்டரி கொள்கையினை கடுமையாக்கியுள்ளது. இது நிதி சந்தையில் அதிக ஏற்ற இறக்கத்தினை உருவாக்கியுள்ளது.

ICICI வங்கி கடன் மோசடி.. உண்மையை உடைக்கும் அரவிந்த் குப்தா..?! ICICI வங்கி கடன் மோசடி.. உண்மையை உடைக்கும் அரவிந்த் குப்தா..?!

வலுவான  அடிப்படைகள்

வலுவான அடிப்படைகள்

இந்திய பொருளாதாரம் சர்வதேச சந்தையின் மந்த நிலைக்கு மத்தியில் உள்ளது. எனினும் சிறந்த பொருளாதார அடிப்படை சந்தைகள் மற்றும் ஆரோக்கியமான நிதி மற்றும் நிதி அல்லாத துறைகள் என பலவற்றிலும் மத்தியில் வலுவான நிலையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்தியா ஒரு வலுவான நிதியியல் அமைப்பில் உள்ளது எனலாம்.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

தொடர்ந்து கடனுக்கான தேவையானது அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டு விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் வங்கிகளின் சொத்து தரமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது வங்கிகள் லாபத்திற்கு திரும்ப வழிவகுக்கலாம். வலுவான பணப்புழக்கத்தின் மத்தியில் வங்கிகளும் பயடைந்து வருகின்றன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வாராக்கடன் சரிவு
 

வாராக்கடன் சரிவு

வலுவான வளர்ச்சிகளுக்கு மத்தியில் வங்கிகளின் (scheduled commercial banks) செயல்படாத சொத்து மதிப்பு 7 வருடத்தில் இல்லாத அளவுக்கு 5.0% ஆகவும், இதே நிகர செயல்படாத சொத்துகளின் மதிப்பு 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.3% ஆகவும் செப்டம்பர் 2022ல் குறைந்துள்ளது. தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் கடுமையான சூழல் மத்தியிலும், வங்கிகள் சிறப்பாக செயல்பட உதவும் எனலாம்.

வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு

வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு

இது ஒரு புறம் எனில் மறுபுறம் ரிசர்வ் வங்கி இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது, செப்டம்பர் காலாண்டில் ஜிடிபியில் 4.4% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 2.2% ஆக இருந்தது. இது அதிகளவிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்தளவுக்கு அதிகரித்துள்ளது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை விகிதமானது இரண்டாவது காலாண்டில், 36.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது ஜிடிபியில் 4.4% ஆகும். இது முதல் காலாண்டில் 18.2 பில்லியன் டாலராக இருந்தது. இது ஜிடிபியில் 2.2% ஆக இருந்தது. கடந்த ஆண்டில் முதல் காலாண்டில் பற்றாக்குறையானது 9.7 பில்லியன் டாலர்களாக இருந்தது.

சரக்கு வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு

சரக்கு வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு

2022 - 23ம் ஆண்டின் முதல் காலாண்டில் சரக்கு வர்த்தக பற்றாக்குறையானது ஜுலை - செப்டம்பரில் 83.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது முதல் காலாண்டில் 63 பில்லியன் டாலராக இருந்தது. இது நடப்பு கணக்கு பற்றாக்குறையினை தூண்டியுள்ளது.

இதே சேவை ஏற்றுமதியானது கடந்த ஆண்டினை காட்டிலும் 30.2% அதிகரித்துள்ளது. குறிப்பாக சாப்ட்வேர் ஏற்றுமதி, வணிகம் மற்றும் போக்குவரத்து சேவையும் அதிகரித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi ஆர்பிஐ
English summary

India's current account deficit surged to 4.4% of GDP: RBI report

India's current account deficit surged to 4.4% of GDP: RBI report
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X