இந்தியா கடந்த 67 ஆண்டுகளில் 14 பிரதமர்களை கண்டுள்ளது, இந்த காலக்கட்டத்தில் இந்தியாவின் மொத்த கடன் அளவு 55 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில்..
நரேந்திர மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் மொத்த கடன் அளவு 155 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையின் நிதியியல் அடிப்படையிலான முடிவுகளில் மார்ச் 31, 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் மொத்த கடன் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சேர்த்து) 152,61,122.12 கோடி ரூபாயாக உள்ளது. 2024 மார்ச் 31ல் இதன் அளவு 169,46,666.85 கோடி ரூபாயாக உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பொருளாதார முறைகேடு (economic mismanagement) காரணமாக 100 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் செய்தியாளர் கூட்டத்தில் குற்றம் சாட்டினார்.
இதோடு மலைபோல் குவிந்துக்கிடக்கும் கடனுக்கு வருடம் 11 லட்சம் கோடி ரூபாயை வட்டியாக மட்டுமே செலுத்தி வருகிறோம் என சுப்ரியா ஷ்ரினேட் கூறினார். இதேபோல் CAG அமைப்பின் debt-stability 2020 அறிக்கையில் எதிர்மறையான நிலையில் இந்தியா உள்ளது.
இதேபோல் debt to GDP Ratio முன்பு 52.5 சதவீதமாக இருந்தது தற்போது 84 சதவீதமாக உயர்ந்துள்ளது. debt to GDP Ratio என்பது ஒரு நாட்டு அரசின் மொத்த கடன் மற்றும் நாட்டின் ஜிடிபி மத்தியிலான வித்தியாசம்.
மேலும் பொருளாதார மேலாண்மை என்பது தலைப்பு மேலாண்மை (headline management) போன்றது அல்ல என்று சுப்ரியா ஷ்ரினேட் கூறினார். இது டெலிப்ராம்ப்டர்கள் மூலம் செய்ய முடியாது, நிச்சயமாக வாட்ஸ்அப் ஃபார்வர்டு மூலம் செய்ய முடியாது.

இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இந்திய பொருளாதாரத்தின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வேளையில் வெள்ளை அறிக்கை மிகவும் அவசியமாக உள்ளது என தெரிவித்தார்.
இதேபோல் இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் வெறும் 3 சதவீத சொத்துக்களை வைத்திருக்கும் வேளையில் இவர்கள் மொத்த ஜிஎஸ்டி வசூலில் 64 சதவீதம் செலுத்துகின்றனர்.
இதேபோல் இந்தியாவின் டாப் 10 சதவீத பணக்காரர்கள் 80 சதவீத சொத்துக்களை வைத்திருக்கும் வேளையில் வெறும் 3 சதவீதம் ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கின்றனர் எனவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications