ஜிடிபி விகிதம் டிசம்பர் காலாண்டில் -15% சரிவு.. Paasche Indexன் படி சு சுவாமி கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக இந்தியாவின் ஜிடிபி விகிதமானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், மூன்றாவது காலாண்டில் 0.4% வளர்ச்சி கண்டதாக அரசு தரவுகள் வெளியானது.

நடப்பு நிதியாண்டில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் முதல் காலாண்டிலேயே ஜிடிபி 24.4% மோசமான வீழ்ச்சியினைக் கண்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் ஜிடிபி விகிதம் 7.3 சதவீதமாக வீழ்ச்சியினை பதிவு செய்தது.

சுப்பிரமணியன் சுவாமி கணிப்பு
 

சுப்பிரமணியன் சுவாமி கணிப்பு

பாஜகாவின் மூத்த தலைவரும், பொருளாதார நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி, இந்திய ஜிடிபி பற்றி கூறுகையில், மூன்றாவது காலாண்டில் Laspeyres Price Index Number-ஐ பயன்படுத்தி -10 சதவீதமாகவும், இதே Paasche Index பயன்படுத்தினால் -15 சதவீதமாகவும் இருந்திருக்கும். இது எம் எஸ் எம் இ-க்களில் எதிர்மறையான வளர்ச்சியினை யூகித்து, முறைசாரா துறையையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Paasche Index – GDP

Paasche Index – GDP

எம் எஸ் எம் இ-க்கள் மற்றும் முறைசாரா துறைகளில் எதிர்மறையான வளர்ச்சியினை யூகித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்தால், Laspeyres Price Index குறியீட்டின் படி இந்தியாவின் ஜிடிபி விகிதம் -10 சதவீதமாக இருக்கும், இது 0.4 சதவீத வளர்ச்சி இருக்காது. இதே Paasche Index பயன்படுத்தினால் -15 சதவீதமாக இருக்கும்.

Laspeyres Price Index - GDP

Laspeyres Price Index - GDP

இந்த Laspeyres Price Index என்பது பொருளாதாரத்தின் பொதுவான விலை நிலை மற்றும் வாழ்க்கைச் செலவை அளவிடுவதற்கும், பணவீக்கத்தினை கணக்கிடுவதற்கு பயன்படுத்தும் ஒரு குறியீடாகும். இதே Paasche Index என்பது ஒரு நுகர்வோர் விலைக் குறியீடாகும். அரசு கணிப்பின் படி, இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.4% அதிகரித்துள்ளது.

சரிவினைக் காணலாம்
 

சரிவினைக் காணலாம்

இது முதலீடுகள், அரசாங்க செலவுகளால் உந்தப்படுகிறது. ஏனெனில் தனியார் செலவுகள் முடங்கியுள்ளன. முந்தைய முதல் காலாண்டு ஜிடிபி விகிதத்தினை 23.9 சதவீதத்தில் இருந்து, 24.4 சதவீதமாக திருத்தியது. அதே நேரத்தில் இரண்டாம் காலண்டிற்கான சுருக்கம் 7.3 சதவீதமாகவும் திருத்தப்பட்டது. மொத்தத்தில் 2020 - 21ம் நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 8 சதவீதம் சரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s December quarter GDP -15% using paache index

GDP data.. govt release October – December GDP data today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X