டெல்லி: பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா தற்போது அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்று முதலே இந்திய பாதுகாப்புத் துறைக்கு தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயார் செய்வது மற்றும் அதிநவீன பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது என இலக்கு நிர்ணயம் செய்தது. அதற்கேற்ற வகையில் கொள்கைகளையும் மாற்றியது. அந்த வகையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 30 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியா தற்போது 90 நாடுகளுக்கு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ரஷ்யா உக்ரைன் இடையிலான சண்டை மற்றும் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான மோதல் ஆகியவை காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவும் அரசியல் ஸ்திரமற்றதன்மை காரணமாக பல்வேறு நாடுகளும் ராணுவ ரீதியாக தங்களை வலுப்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளன. இதற்காக அவை இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி வருகின்றன.
2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி 78% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி மதிப்பு 3885 கோடி ரூபாயாக இருந்து நடப்பு ஆண்டு அது 6915 கோடியாக அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி 35 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என இலக்க நிர்ணயம் செய்தது. அது மட்டும் இன்றி 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட உற்பத்தி என்பது 1.75 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
அண்மையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி 2023-24 ஆம் நிதி ஆண்டில் 21,083 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டை விட 32 சதவிகிதம் அதிகமாகும். 2013 -14 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட ஏற்றுமதி என்பது வெறும் 110 மில்லியன் டாலர்கள் தான். அமெரிக்கா தான் இந்தியாவின் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக இருக்கிறது.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட உபகரணங்களின் ஏற்றுமதியில் 50 % அமெரிக்காவிற்கு செல்கிறது . அமெரிக்க நிறுவனங்கள் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட அமைப்புகள், துணை அமைப்புகள் மற்றும் உறுப்புப் பொருட்களை இந்திய நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் வாங்குகின்றன. குறிப்பாக போயிங் மற்றும் லாக்ஹீட் மார்டின் நிறுவனங்கள் டாடா நிறுவனத்துடன் கூட்டு நிறுவனத்தை உருவாக்கி பாதுகாப்பு துறை சம்மந்தப்பட்ட வர்த்தகத்தை தொடர்கின்றன.
பொதுவாக இந்தியாவில் இருந்து வெடி பொருட்கள், சிறிய ரக ஆயுதங்கள், துப்பாக்கிகள் ,புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள், ட்ரோன்கள், வேகமாக சென்று தாக்கும் வாகனங்கள் ஆகியவை தான் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

ஈரான் போரில் முக்கிய திருப்பம்: பாதுகாப்பு படை தலைவர் கொலை.. நூலிழையில் உயிர் தப்பிய கமேனி மகன்!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு



Click it and Unblock the Notifications