உலகம் முழுவதுமே பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாகவும் ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவுமே இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது . உழைப்பின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் சமமாக பகிரப்படாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி என்பது மிக மோசமாக இருக்கிறது என சென்னையை சேர்ந்த நிதி திட்டமிடல் நிபுணரான டி. முத்துகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் இந்தியாவின் பொருளாதார பிளவு நாம் பார்ப்பதை விட மிக மோசமாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

நம் நாட்டில் 57% வருமானமானது 10 சதவீத மக்கள் தொகைக்கு தான் செல்கிறது என்கிறார். அதாவது பணக்காரர்கள், தொழிலதிபர்கள் தான் 57% வருமானத்தை பெறுகின்றனர் என கூறுகிறார். மீதமுள்ள 90 சதவீத மக்கள் 43% வருமானத்தை தான் தங்களுக்கான பகிர்வாக பெறுகிறார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவின் தனி நபர் வருமானம் என்பது 2700 டாலர் இந்தியாவின் இந்த 10 சதவீத மக்களை நீக்கிவிட்டால் அதாவது பெரும்பணக்காரர்களை நீக்கிவிட்டால் மீதமிருக்கும் 90% மக்களுக்கான தனிநபர் வருமானம் வெறும் 1300 டாலர்கள்தான் என தெரிவிக்கிறார் . இது பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக மோசமானது என கூறியிருக்கிறார்.
இந்தியாவில் பெரும் பணக்காரர்களாகவும் தொழிலதிபர்களாகவும் இருக்கக்கூடிய 10 சதவீத மக்களின் எண்ணிக்கை 150 மில்லியன் மீதமுள்ள 90% மக்களின் எண்ணிக்கை 1300 மில்லியன். இந்த 10 சதவீத மக்கள் தொகையில் நீங்கள் இருந்தால் பிரச்சனை இல்லை ஆனால் இந்த 90% மக்கள் தொகையில் ஒருவராக நீங்கள் இருந்தால் உங்களுடைய அன்றாட வாழ்க்கையை நரகம் தான் என தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் தி இண்டஸ் வேலி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி இருக்கும் முத்துகிருஷ்ணன் இந்தியாவை சேர்ந்த 1000 மில்லியன் இந்தியர்களுக்கு பொருட்களை வாங்கும் சக்தியே இல்லை என சுட்டிக்காட்டி இருக்கிறார். அதாவது தங்களுக்கான அத்தியாவசிய தேவைகளை தாண்டி அவர்களால் எதையும் வாங்க முடியாத சூழலில் தான் இருக்கின்றனர் என்றும் அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்கள் மற்றும் அரசின் மானியங்கள் தான் அவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரமாக இருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நாடாக நாம் வளர வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என டி முத்துகிருஷ்ணன் தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இவருடைய இந்த பதிவு இந்தியா வளர்ச்சி அடைகிறது என ஒருபுறம் கூறினாலும் அந்த வளர்ச்சி யாரை சென்று சேர்ந்திருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்கிறது ஜிடிபி வளர்கிறது ஆனால் அது சமமாக அனைவரிடமும் பகிரப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது .
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications