இந்தியாவின் வளர்ச்சி 9.2% ஆக இருக்கலாம்..!

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (GDP) 9.2% ஆக வளர்ச்சி காணலாம் என அரசு கணிப்புகள் வெளியாகியுள்ளது.

இது கடந்த ஆண்டில் 7.3% ஆக சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கணிப்பு விகிதமானது இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பான 9.5% ஐ விட குறைவாகும். இவற்றோடு அரசு அட்வான்ஸ் ஜிடிபி குறித்தான கணிப்புகள், வரி வருவாய் மதிப்பீடுகள், நிதி பற்றாக்குறை மதிப்பீடு உள்ளிட்டவை பற்றி அரசு கணித்துள்ளது.

நாமினல் ஜிடிபி கணிப்பு

நாமினல் ஜிடிபி கணிப்பு

இதே நாமினல் ஜிடிபி விகிதமானது 17.4% ஆக அதிகரிக்கலாம் என்றும் அரசு கணிப்புகள் மதிப்பிட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் நாமினல் GVA விக்கிதமானது 210.37 லட்சம் கோடி ரூபாயாகவும். இது கடந்த ஆண்டில் 179.15 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. கடந்த ஆண்டில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி விகிதமானது சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரியல் ஜிடிபி கணிப்பு

ரியல் ஜிடிபி கணிப்பு

இதே ரியல் ஜிடிபி கணிப்பானது நடப்பு நிதியாண்டில் 147.54 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 135.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஐ தலைவரின் கருத்து

எஸ்பிஐ தலைவரின் கருத்து

சில தினங்களுக்கு முன்பு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் ரஜ்னிஷ் குமார், இந்திய அரசின் பொருளாதார இலக்கான 5 டிரில்லியன் டாலரை அடைய வருடத்திற்கு 8 சதவீத வளர்ச்சியினை அடைய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் அரசின் கணிப்பு விகிதமானது 9 சதவீதத்திற்கு மேலாக இருந்து வருகின்றது. அரசின் இந்த கணிப்பினை போல வளர்ச்சி விகிதமானது இருந்தால், இலக்கினை அடைவது சாத்தியமான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

 4வது காலாண்டில் வளர்ச்சி

4வது காலாண்டில் வளர்ச்சி

எப்படியிருப்பினும் தற்போது நாட்டில் மிக வேகமாக ஓமிக்ரான் தாக்கம் பரவி வரும் நிலையில், அது இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக ஜிடிபி விகிதமானது சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில தினங்களுக்கு முன்பு வெளியான அறிக்கையொன்றில் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 0.40% ஆக இருக்கலாம் என்ற கணிப்பு வெளியாகியிருந்தது.

முந்தைய கணிப்பு

முந்தைய கணிப்பு

அட்வான்ஸ் ஜிடிபி விகிதமானது 9.2% இருக்கலாம் என்ற கணிப்பு வெளியாகியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான அறிக்கையொன்றில் ரியல் ஜிடிபி விகிதமானது 9% ஆக வளர்ச்சி காணலாம் என கணிப்பு வெளியாகியிருந்தது என நினைவுகூறத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+