இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. ஒரு புறம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டின் செல்வ வளங்களை சுரண்டி இருந்தனர், மறுபுறம் போர்களாலும், சுதந்திர போராட்டங்களாலும் பல பகுதிகள் அழிந்து போயிருந்தன.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் இருப்பதிலும் பெரும்பாலான பொருட்களுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதையும் உறுதிப்படுத்தினர். எனவே 1947 ஆகஸ்ட் 15 அன்று குறைந்த தனிநபர் வருமானம் மற்றும் குறைந்த தேசிய வருமானம் கொண்ட நாடாக இந்தியா இருந்தது.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பணியாற்றிய அல்லது தொழில்துறையினர் தேசிய வருமானத்தில் ஒப்பீட்டளவில் பெரிய பங்கை அனுபவித்து வந்தனர், அதே நேரத்தில் பெரும்பான்மையான ஏழைகள் சிறிய பங்கை பெற்று வந்தனர்.
பெரும்பாலான மக்கள் தொழிலுக்காக விவசாயத்தை நம்பியிருந்தனர். நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் மிகக் குறைவாகவே இருந்தன. அன்அகாடெமி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த காலகட்டத்தில் இரண்டு பெரிய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியது ஒன்று வறுமை மற்றொன்று படிப்பறிவு. பெரும்பாலான மக்கள் வறுமையில் இருந்தனர் மேலும் பெரும்பாலான மக்களுக்கு போதிய படிப்பறிவு கிடையாது.
நாட்டில் தகவல் தொடர்பு, போக்குவரத்து மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.விவசாயம் தவிர பெரும்பாலான பொருட்களுக்கு நாம் வெளிநாட்டை தான் சார்ந்து இருந்தோம். இந்தியாவில் அப்போது மக்களின் சராசரி ஆயுட்காலம் கடுமையான அளவு குறைந்திருந்தது.16 சதவீத மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்களாக இருந்தனர்.இந்திய மக்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின் தங்கியிருந்தனர்.
1947க்கு முன்பு இந்தியாவில் இந்திய நாட்டின் வருமானத்தில் 95% விவசாய மூலம் மட்டுமே கிடைத்தது கிட்டத்தட்ட 85 % மக்கள் விவசாயத்தை நம்பி மட்டுமே வாழ்ந்து வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இங்கே தொழில்துறையை மேம்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் 72% மக்கள் விவசாய தொழில்களில் ஈடுபட்டு வந்தனர், 10.2% மக்கள் உற்பத்தி துறையில் இருந்தனர், 17% மக்கள் அரசு துறைகளிலும் சேவை துறைகளிலும் வணிக துறைகளிலும் பிரிந்து இருந்தனர்.
பெரும்பாலான மக்கள் விவசாயத்தையும் இந்தியா தன்னுடைய வருமானத்திற்காக பெரும்பாலும் விவசாயத்தையுமே சார்ந்து இருந்தது. பிரிந்திருந்த சமஸ்தானங்களை ஒன்றிணைப்பது, மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவது அதற்கு நாட்டின் வருமானத்தை பெருக்குவது என பல்வேறு சிக்கல்கள் இருந்தன.
1947இல் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்கள் 26 நவம்பர் அன்று தாக்கல் செய்தார். அப்போது இந்தியாவின் வருமானம் 171.15 கோடி ரூபாய், மொத்த செலவினம் 197.29 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. நிதி பற்றாக்குறை 24.59 கோடி ரூபாயாக இருந்தது. அந்த காலகட்டத்தில், பாதுகாப்பு துறை செலவினம் மட்டும் 92.74 கோடி ரூபாயாக இருந்தது.
உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கவும் வேளாண் மற்றும் பிற துறைகளை வளர்ச்சி அடைய செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஐந்தாண்டு திட்டங்கள், பசுமைபுரட்சி, உலகமயமாக்கல் என இப்படி படிப்படியாக இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. கூடிய விரைவில் 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட பொருளாதாரமாக இந்தியா உயர இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications