பொருளாதாரம் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.. ஆனால் இது சந்தைக்கு போதுமானதாக இல்லை.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதன் தாக்கம் பொருளாதாரத்திலும், பங்கு சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. இது இந்தியாவில் சற்று அதிகமாகவே உள்ளது எனலாம்.

 

எனினும் உலகின் மிக மோசமான பொருளாதாரத்தினை எதிர்த்துத் பேராடும் போது, நாட்டில் பங்குகள் உலகளவில் மார்ச் மாதத்தில் இருந்து, மிகச் சிறந்த மீட்டெடுப்புகளில் ஒன்றை பதிவு செய்து வருகின்றன.

 
பொருளாதாரம் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.. ஆனால் இது சந்தைக்கு போதுமானதாக இல்லை.. !

உலகளவில் கொரோனாவின் தாக்கத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையிலும், கடந்த கால நிலையினை ஒப்பிடும்போதும், முதலீட்டாளர்களின் கடுமையான யதார்த்தத்தினையே இது காட்டுகிறது.

எந்தவொரு சந்தை நடவடிக்கையும் ஃபண்டமென்டல் இல்லாமல் ஆதாரிக்காது என்று சி ஜே ஜார்ஜ், ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். அதுமட்டும் அல்ல நாட்டில் ஃபண்டமென்டல் மேம்படுவதை நாங்கள் இன்னும் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.

நாட்டில் நெருக்கடியான நிலை நிலவி வரும் நிலையில், நிதி பற்றாக்குறையானது ஆண்டு இலக்கிற்கு பக்கத்தில் உள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு மேலும் நெருக்கடியினை கொடுத்துள்ளது. எனினும் மே மாதத்தில் அறிவிக்கப்பட்ட 21 டிரில்லியன் ரூபாயினை அரசு வழங்கியது. எனினும் அரசின் இந்த காயத்திற்கு மேலும் உப்பு சேர்ப்பது போல மோசமான கடன் விகிதமும் அதிகரித்து வருகின்றது.

இது எந்தளவுக்கு எனில், உலகின் கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளை தொடர்ந்து, 2021ம் ஆண்டில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய வங்கி கடந்த மாதமே அறிவித்தது.

உண்மையில் இந்திய வணிகங்களுக்கான பார்வை உலகில் மிக மோசமானது என்று ஐஹெச்எஸ் கடந்த மாதம் ஒரு தரவில் கூறியது. இந்த தரவு வழங்குனரின் ஜூன் மாத கணக்கெடுப்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முதல் முறையாக எதிர்மறையாக மாறியது. மேலும் பதிலளித்தவர்களில் பலர் வரவிருக்கும் ஆண்டில் செயல்பாட்டினை எப்படி மேன்மைபடுத்துவது என்பது குறித்து நிச்சயமற்றவர்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும் வணிக செயல்பாடு நடவடிக்கைகளில் விரைவான முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் பங்குகளை உயர்த்துகிறது. குறிப்பாக வைரஸ் ஆனது இன்னும் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் பங்கு விலைகள் அதிகரித்து வருவது இதனையே சுட்டிக் காட்டுகின்றது.

உலகில் மிக வேகமாக அதிகரித்து வரும் தொற்று நோய் பரவலில், இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 50,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆக வணிகங்கள் மற்றும் மக்களின் இயக்கம் மீதான தடைகளில் சற்று தளர்வுகள் சற்று அளிக்கப்பட்ட நிலையிலும் கூட, பொருளாதார செயல்பாடு என்பது சற்று தடுமாற்றத்திலேயே உள்ளது.

குறிப்பாக சீனாவை தவிர பெரும்பாலான ஆசிய நாடுகளின் வளர்ச்சியிலும் சரிவினை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவும் சரிவினைக் சந்திக்கும் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

எனினும் பொருளாதார நடவடிக்கைகளின் வேகம் மெதுவாக இருந்தாலும், கடந்த ஜூன் மாதத்தில் ஏற்றுமதிகள் மற்றும் வணிக நடவடிக்கைகள் சற்று ஏற்றம் கண்டன. இதற்கிடையில் மார்ச் மாதத்தில் வீழ்ச்சியில் இருந்த சென்செக்ஸ், தற்போது 45% ஏற்றத்தில் உள்ளது. இது வெளிநாட்டினர் தங்களது முதலீடுகளை அதிகரித்து வருவதற்கு ஒரு சான்றாகும்.

இந்தியப் பொருளாதாரத்திற்கு இது எவ்வளவு கடினமானது. முதலீட்டாளார்கள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வைரஸின் தாக்கம் உச்சத்தினை தொட்டு வரும் நிலையிலும் கூட, சென்செக்ஸ் ஏன் தொடர்ந்து உயரக்கூடும் என்றும் இது விளக்குகிறது.

தற்போதைக்கு முதலீட்டாளர்கள் பொருளாதார கண்ணோட்டம் குறித்த விளக்கத்தினை கவனிப்பார்கள். மத்திய வங்கியின் இந்த கூட்டத்தில் முக்கிய வட்டி விகிதத்தினை 25 அடிப்படி புள்ளிகளை குறைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s economy picking up to grow but it’s not enough for a market

Analysts say India’s economy picking up to grow but it’s not enough for a market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X