இந்தியாவின் ஜிடிபி விகிதம் இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. நிபுணர்கள் இதனை 10% மேலாக சரியும் என்று கணித்திருந்த நிலையில், எதிர்பார்த்த அளவு சரிவு இல்லை என்பது சற்றே ஆறுதல் தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
இது கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் கிட்டதட்ட 24 சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், இந்த காலாண்டிலும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. இந்த நிலையில் இந்திய பொருளாதாரம் ரெசசனிற்கு தள்ளப்பட்டுள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும், நிபுணர்கள் கணிப்பினை விட, சற்று குறைவாக வீழ்ச்சி கண்டுள்ளது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
உண்மையில் கொரோனாவினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் பல்வேறு தளர்வுகளை அளிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பினாலும், நிபுணர்கள் கணித்த அளவுக்கு வீழ்ச்சி காணவில்லை என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சியானது அக்டோபரில் -2.5% ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபரில் -5.5% ஆக இருந்தது கவனிக்கதக்கது.
குறிப்பாக நிலக்கரி துறை 11.6% வளர்ச்சியிலும், இதே கச்சா எண்ணெய் 6.2% வளர்ச்சியிலும், இயற்கை எரிவாயு 8.6% வளர்ச்சியிலும், சுத்திகரிப்பு பொருட்கள் - 17.0% சரிவிலும், பெர்டிலைசர் 6.3% வளர்ச்சியிலும், ஸ்டீல் *- 2.7% வளர்ச்சியிலும், சிமெண்ட் 2.8% வளர்ச்சியிலும், மின்சாரம் 10.5% வளார்ச்சியிலும் காணப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் சற்று சரிவில் இருந்தாலும், ஏப்ரல் - அக்டோபர் மாதத்தில் -13% சரிவிலும் காணப்படுகிறது. இதே ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் நிதி பற்றாக்குறை 119.7% அதிகரித்துள்ளது.
பட்ஜெட்டில் 7.96 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இது 9.53 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பரவி வரும் கொரோனாவின் காரணமாக முதல் காலாண்டில், நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 40 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி கண்டது. தற்போது பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், வளர்ச்சி மிக மெதுவான வேகத்திலேயே உள்ளது.
இது மெதுவான வேகத்தில் இருந்தாலும், நிபுணர்கள் கூறுவதைப் போல் வலுவான வளர்ச்சியாக உள்ளது.
எனினும் பொருளாதார சரிவுக்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல, கொரோனாவிற்கு முன்பே பொருளாதாரம் கடுமையான சரிவினைக் கண்டிருந்தது.
More From GoodReturns

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ஈரான் போரில் அடுத்த திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மெகா திட்டம் தீட்டும் ஈரான் அரசு..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications