Byju's இந்தியாவின் மிகப்பெரிய கல்வி சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாகும்.
பைஜூ நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து 2020ம் ஆண்டின், தொடக்கத்தில் அமெரிக்க கல்வி முறைக்கு ஏற்ற வகையிலும் தன் சேவையை வழங்கவுள்ளதாக கூறியிருந்தது கவனிக்கதக்கது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் (Blackrock & T rowe) மற்றும் டி ரோவ் நிறுவனங்கள் 200 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்த எஜூகேசன் ஸ்டார்டப் நிறுவனம், செப்டம்பர் மாதத்தில் தனியார் நிறுவனமான சில்வர் லேக் பார்ட்னர்ஸ் மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களான ஜெனரல் அட்லாண்டில், Owl வென்சர்ஸ் மற்றும் டைகர் குளோபர் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து 10.8 மில்லியன் டாலர்களை திரட்டியது.
இதன் பின்னர் பிளாக்ராக், சாண்ட்ஸ் கேபிடல் மற்றும் அல்கியோன் கேபிடல் ஆகியவை புதிய முதலீட்டாளர்களாக இணைந்தன. இந்த சுற்றில் முதலீடு 11.1 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. எனினும் இது குறித்து இந்த நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்டப் நிறுவனமான இது, இணைய வழிக் கல்விதான் பைஜூ நிறுவனத்தின் அடிப்படையாக உள்ளது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடும் இணைய பயன்பாடும் வெகுவாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் ஆன்லைன் கற்றல் சந்தை 2020 ஆம் ஆண்டில் இரு மடங்கிற்கு மேலாக 5.7 பில்லியன் டாலராக இருக்கும் என்று அரசாங்க ஆதரவுடைய இந்தியா பிராண்ட் ஈக்விட்டி பவுண்டேஷன் முன்னதாக ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.
இதற்கிடையில் தான் இந்த நிறுவனத்தின் வருவாய் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
பைஜூ நிறுவனத்தின் உரிமையாளர் பைஜு ரவீந்திரன் கேரளா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வளர்ந்தவர். அங்கு அவரது பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களாக இருந்தனர். ஹாக்கி மற்றும் கால்பந்து விளையாட்டுகளின் மீதான் ஆர்வத்துடன் இருந்தவர், இருந்துள்ளது. பின் பொறியியல் கல்லூரியில் சேர தானே முயற்சி எடுத்து படித்து நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதை தொடக்கமாக வைத்து பின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார். வார இறுதி நாட்களில் பல நகரங்களுக்கும் பயணிக்கும் பிரபலமான ஆசிரியராக ஆனார். இதன் பின்னர் 2011ம் ஆண்டின் திங்க் & லர்ன் Think & Learn என்பதை அமைத்தார். அதன் பிறகு 2015ம் ஆண்டில் தன்னுடைய செயலியை அறிமுகப்படுத்தும் முன் ஆன்லைனில் பாடங்களை வழங்கினார்.
இந்த புதிய வழிமுறை தான் இவரின் தொழிலில் 35 மில்லியனுக்கும் அதிகமானவர்களை ஒப்பந்தம் செய்ய வைத்தது. பைஜூவின் இந்த புதிய அணுகுமுறை எளிதானது, குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குழந்தைகளை வசீகரிக்கிறது.


Click it and Unblock the Notifications